சத்தியத்தின் ஆவி Phoenix, Arizona, USA 63-0118 1நாம் ஜெபிக்கும் இவ்வேளையில் கொஞ்ச நேரம் நாம் நின்று கொண்டு நம் தலைகளைத் தாழ்த்துவோமாக. நீதியுள்ள எங்கள் பரலோகப் பிதாவே,எங்கள் கண்கள் காணும்படியாகவும், எங்கள் காதுகளால் இந்த உலகத்தின் வரலாறு முடியப்போகிற காட்சிகளைக் கேட்கும்படியாகவும் செய்துள்ள எல்லாவற்றுக்கும் போதுமான நாமமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உம்மை அணுகி நீர் எங்களுக்குச் செய்துள்ள யாவற்றுக்காகவும் ஸ்தோத்தரிக்க விரும்புகிறோம். காலமானது நித்தியத்திற்குள் சென்று மறையப்போகும் நேரத்தில் உள்ள வெளிச்சத்தை நாங்கள் காணும்போது கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு அதிக காலம் இல்லை என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். 2பரலோகப் பிதாவே, இந்த இரவுப்பொழுதில் எங்களை நினைவு கூறும்படியாக, உம்மிடத்தில் கேட்கிறோம்; எங்களிடத்தில் ஏதாவது பொல்லாப்பு இருக்குமானால் அதை இவ்விரவுப் பொழுதில் எங்களிலிருந்து எடுத்துப்போடும் ஆண்டவரே‚ ஏனெனில், இந்த இரவில் நீர் வரும்போது, வியாதியாய் உள்ளவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஜெபிப்பதற்காக எங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம்.'' இதோ மணவாளன் வருகிறார் சென்று அவரைச் சந்தியுங்கள்…, என்கிற சத்தம் கேட்கப்படும்போது எங்கள் வஸ்திரங்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்பட்டிருக்கவும்; இங்கும், கடல் கடந்து உலகெங்கும் உள்ள உம்முடைய சபைக்காகவும்; எல்லா தேசங்களிலும், எல்லா இடங்களிலும் உள்ள உம்முடைய பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்கிறோம். அந்த நேரத்தில், கர்த்தாவே‚ உம்முடைய கிருபையினாலும், நாங்கள் நம்பியுள்ள இயேசுவின் தகுதியினாலும், எங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்திடவும், மணவாளனைச் சந்திக்க முன்னோக்கிச் சென்றிடவும் நாங்கள் தகுதி பெறட்டும். கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தினால் எங்கள் இருதயங்களை விருத்தசேதனம் செய்து இவ்விரவில் எங்கள் எல்லா அவிசுவாசங்களையும் வெளியே எடுத்துப்போட்டு மகத்தான ஆராதனையைத் தரும்படி இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 3மறுபடியுமாக கர்த்தரின் ஆலயத்தில்; இந்த இரவின்; பொழுதில் ஆராதனையில் இருப்பதற்கு இது நிச்சயமாகவே நன்றாய்; இருக்கிறது. நாங்கள் நேற்றைய சாயங்காலத்தில் சகோதரர் க்ரூமெரின் இடத்தில் ஒரு மிகப்பெரிய மகத்தான நேரத்தைக் கொண்டிருந்தோம். மேலும் எல்லா இடங்களிலும் நாங்கள் மகத்தான நேரத்தைக் கொண்டிருந்தோம். நான் நினைத்ததைக் காட்டிலும் மிக அதிகமாக, அளவில்லாதவகையில் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். அப்படி அவரால் செய்ய முடியும். அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்துகொள்ளும்படி அவ்வளவாக நிறைவான இரக்கத்தையும், அன்பையும் கொண்டிருந்தார். அப்படியில்லையா? அவரை அறிவதே ஜீவனாக இருக்கிறது என்று நினைக்கும் போது; அவரை அறிவதே ஜீவன். 4இப்பொழுது, நாளை இரவு நாங்கள் சென்ட்ரல் அவென்யூ அசெம்பிளிக்குப் போகிறோம். அதை அப்படி அழைப்பார்கள் என்று எண்ணுகிறேன். சகோதரர் புல்லர் அவரும் ஒரு நல்ல சகோதரர். அவ்விடத்தில் அது ஒரு பெரிய சபையாய் இருக்கிறது என்று நான்; நினைக்கிறேன். மேலும் அது சகோதரர் புல்லருக்குச் சரி என்றால் அங்கே ஒரு ஜெபவரிசையை ஏற்படுத்தலாம்; என்று நான் எண்ணுகிறேன். அதன் பிறகு மறுநாள் காலை நாங்கள் பீனிக்ஸில் இருக்கும் அப்போஸ்தல சபையில்; இருக்க வேண்டும். அதை அப்படி அழைப்பார்கள் என்று எண்ணுகிறேன், அங்கு இருக்கும் மேய்ப்பர்... அந்த சகோதரர் யார் என்றும் நான்; கடந்த வருடம்; அங்கு இருந்தேனா என்றும் எனக்கு நினைவு இல்லை. (சகோதரர் 'இல்லை'' என்று பதிலளிக்கிறார்). 5பிறகு, ஞாயிறு இரவில் இங்கு இருக்கும் விலையேறப்பெற்ற சகோதரர் ஓட்லாவின் சபையில், இயேசுகிறிஸ்து நாமம் சபையில் இருப்போம். நானும் மற்றும் என் குடும்பத்தாரும் அங்கே போவதற்கும், மேலும் அங்கு சில அருமையான பாடல்களைக் கேட்பதற்கும்; மிகுந்த எதிர்பார்ப்புடன்; இருக்கிறோம். பில்லிபாலுக்கு அவை எல்லாம் நன்றாக மனப்பாடம் ஆகியிருக்கும். அந்த பாட்டு, 'நான் மேலே செல்கிறேன்“ நாங்கள் அதை பலமுறைபோட்டு நிச்சயமாக அந்த டேப்பே தேய்ந்திருக்கும். அவன் அதை அலுவலகத்தில் ஒவ்வொரு தினமும் எல்லா நேரமும் போடுவான், நான் அங்கே போகும்போதெல்லாம்;... அதைப் பற்றி ஒன்றும் இல்லை; 'மேலே மேலே மேலே” அது அப்படியே போய்க் கொண்டு இருக்கும். அதை நாங்கள் போட்டு கிட்டத்தட்ட முழுவதுமாக தேய்ந்திருக்கும். 6உங்களுக்குத் தெரியுமா, எனக்கு இந்த இரவுப்பொழுதில் என் தொண்டை சரியில்லை என்று தோன்றியது. 'என்னால் மட்டும் வேறு யாரையாவது எனக்குப் பதிலாகப் பேச வைக்க முடியுமானால் என்று எனக்குத் தோன்றிய போது, நான் எதேட்சையாக இங்கே பார்த்தேன்... ஜாக்மூரைக் கண்டேன். அது சரிதான் என்று எண்ணினேன். அது அப்படியே அருமையாய் இருக்கும் சகோதரர் ஜாக் என்று……... இப்போது கேளுங்கள் மேலும் சகோதரர் ராய்பார்டர்ஸ் கூட அங்கே இருப்பதைக் கண்டேன் என்று நான் நினைக்கிறேன். ஆம் ஐயா, சகோதரர் நோயல் ஜோன்ஸ் அங்கே இருந்தார். ஓ என்னே‚ நாங்கள்; எல்லோரும்; எல்லா இடத்திலும் இருக்கிறோம். இது ஒரு நல்ல சமயமாக இருக்கிறது. நான் சிறிது ஓய்வு எடுத்த பிறகு அங்கே இந்த சிறப்பான புருஷர்களை எனக்காக அங்கே பேசவைத்தால் நலமாய் இருக்கும் என நினைத்தேன். என் தொண்டை கரகரப்பாக இருக்கிறபடியால் இங்கிருக்கும் அருமையானவர்கள் எழுந்து எனக்குப் பதிலாகப் பேசலாம் என்று நினைத்தேன். 'கர்த்தர் அந்த வெளிப்பாட்டில்; இல்லை'', என்று சகோதரர் ஜாக் சொன்னார். ஓ, நான் இங்கே வந்தபோது களைப்பாக இருந்தேன், கொஞ்சக் காலமாக நான் களைப்பாகவே இருந்தேன்;. பிறகு அந்த ஜனங்கள் நிற்பதைப் பார்த்தேன். அவர்கள் நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நானும் அவர்களோடே நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 7மேலும் நாங்கள் வரப்போகிற கூட்டங்களுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு அடுத்தவாரம், அங்கே பெந்தெகொஸ்தே அசெம்பளியில் இருக்கும். அதோடே நாங்கள்; கடைசியாக புதன்கிழமை இரவில் பதினொன்றாம் தேதி மற்றும் கார்பீல்டில் கூட்டங்களை முடிக்கிறோம். (என்னால் எல்லாவற்றையும் நினைவுகூற முடியவில்லை) அந்த பட்டணத்தில் இருக்கும் முதலாவது தேவ சபை அதுதான் என்று நான் நினைக்கிறேன். அதன்; பிறகு கூட்டங்கள்; ரமதாவில் துவங்கும். மேலும் அரிசோனாவின் முக்கிய நகரமான டூசானில் வியாபார புருஷர்களுக்கான பெருவிருந்து ஒன்று இருக்கிறது. நாம் எல்லாரும் அறிந்துள்ளபடி பீனிக்ஸ் மற்றும் இந்த இடங்கள் யாவும் நகரத்தின் வெளிப்புறங்களாக உள்ளன. அது சரியே‚ அதுவே முக்கிய இடம். எனது சொந்த நகரம். அந்த குன்றின் மேலுள்ள இன்னார், இன்னாரை உங்களுக்குத் தெரியுமே‚ இது அதனுடைய வெளிப்புற நகரமாகும். நல்லது. உங்கள் எல்லோரையும் அருகில் உள்ளவர்களாகக் கொண்டிருப்பது அருமையானது, ஆகவே... 8அது சகோதரர் ரஸ்முஸ்சன் என்று நான் நினைக்கிறேன், அவர் ஓர் இரவு கூட்டங்களில் இப்படியாகச் சொன்னார் அது... ஓ, அந்த கூட்டத்தை அப்படியாக பாழ்படுத்தியது‚ நாங்கள்; அந்த யூஸ்டனில்; இருந்தோம் என்று நான் நினைக்கிறேன். அவர் பெயர் ரம்சார் அது சரியே, அவர் தான் அது. அவர் சொன்னார்... அந்த இரவுப்பொழுதில் கர்த்தருடைய தூதனானவர் இறங்கி வந்தபோது, அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர்; 'இங்கு இருக்கும் யாவரும். டால்லிஸில்; இருந்து வந்தவர்கள்; என்றார். எங்களுக்குத் தெரியும், 'அது யூஸ்டனில் நகர்ப்புற எல்லையில் இருக்கிறது'', ஓ, என்! இங்கு சிலர் இதை ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக டெக்சாஸ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கூட்டத்தில் ஒரு பெரிய நிசப்தம் ஏற்பட்டது. எனினும் அவர் நன்மையில் மகத்தானவர். இப்பொழுது நாம் வேத வார்த்தைக்குச்சென்று சிறிய சாட்சியைக் கொடுப்போம். அது எல்லாவற்றையும் மாற்றும் அல்லவா? உங்கள் முகத்தை பார்க்க வெட்கமுறும் அளவுக்கு நான் இந்தக் காரியத்தைக்குறித்து அதிகமாகப் பேசிவிட்டேன். நான் சிறிது நேரம் உங்களை இளைப்பாறச் செய்திட கர்த்தர் செய்த நன்மையை சாட்சியாகச் சொல்கிறேன். 9நாம் பரிசுத்த யோவானில் ஒரு காரியத்தைப் பார்ப்போம் பதினாறாம் அதிகாரம் (16:12) பரிசுத்த யோவானில் இருந்து வாசிக்க விரும்புகிறேன். எனக்கு வார்த்தையை வாசிக்கப் பிடிக்கும். ஏனெனில் வார்த்தை தான் நமக்கு சத்தியத்தை அறியச் செய்யும். மேலும் பரிசுத்த யோவானில் எழுதபட்ட சுவிசேஷத்தில். பன்னிரெண்டாம் வசனத்தில் இருந்து துவங்குவோம். கவனமாகக் கேளுங்கள்... ஏனெனில் நான் சாட்சி கொடுக்கப் போகிறேன். அதன் பிறகு நாம் கொஞ்சம் சீக்கிரமாகப் போகலாம் நான் நீண்ட நேரம் உங்களை இருக்கச் செய்கிறேன். நாளை இரவு நாம் கூடுதலாக ஒரு அரை மணிநேரம் இருப்போமாக. அது சரியாக ஒருமணி ஆகிவிடும் சரிதானே? சரி இது பன்னிரெண்டாம் வசனத்தில் துவங்குகிறது. '@@இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள்; இப்பொழுது தாங்கமாட்டீர்கள், சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும்... என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்''. 10உங்களுக்குத் தெரியுமா, கடந்த நாள் மாலைநேரத்தில் இதைக் குறித்து ஒருசிறிய முன் மாதிரியைப் பெற்றோம். இப்பொழுது நாம் முழு சுவிசேஷத்தை உடையவர்களாய்; இருக்கிறோம், 'பரிசுத்த ஆவியின் எல்லாக் கிரியைகளையும் விசுவாசிக்கிறோம். அது நாம் அந்த விதத்தில் தான் முழு சுவிசேஷத்தை உடையவர்களாய், முழு சுவிசேஷத்தை கர்த்தர் எழுதின யாவற்றையும் விசுவாசிக்கிறவர்களாய் இருக்க வேண்டும். மற்றும் நாம் ஒன்றும் இல்லாதவர்களாய் இருக்கிறோம் என்று நம்புகிறோம். நாம் எப்படி இருக்கிறோம் என்றால், அதாவது நான் நேற்றைய தினம் சகோதரர் கார்ல்ளிடம் ஒரு மரத்தைப் பார்த்துச் சொன்னதைப் போல, 'அது ஒரு அழகான பனைமரம் அல்லவா? எனினும்; அதில் ஒன்றும் இல்லை. அதுவெறும் ஒரு எரிமலை சாம்பல்கொத்து, அது அவ்வளவு தான்“ என்றேன். பிறகு நான், 'அது அந்த யூகலிப்டஸ் மரத்தைக் காட்டிலும் எப்படி வேறுபட்டதாய் இருக்கிறது. ஆகவே யூகலிப்டஸ்; மரம் என்றால் என்ன? ஜீவன் இருக்கிற ஒரு எரிமலை சாம்பல்” என்றேன். பிறகு, 'எப்படியிருந்தாலும் நான் யார்? நீங்கள் யார்? பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு எரிமலை சாம்பல். (அது சரி தான்) அது பூமியின் தூசியால்; செய்யப்பட்டு ஜீவனைக் கொண்டிருக்கிறது என்றேன். 11ஒவ்வொரு ஜீவனும், ஜீவனைக் கொடுக்கின்ற எஜமானால் விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு எப்படியாக மற்றும் என்னவாகச் செய்ய வேண்டும் என்று தெரியும். இந்த பூமியில் எல்லாவற்றையும் அவர் மகிமைக்காக வைத்து இருக்கிறார். நட்சத்திரங்கள் அவர் மகிமைக்காக, காற்றுகள் அவர் மகிமைக்காக, பூக்கள் அவர் மகிமைக்காக, மற்றும் நாம், அவருக்கு முடிசூட்டும்; மகிமையாக இருக்கிறோம். ஆனால் பார்ப்பதற்கு மனிதனைத்தவிர எல்லாமே அவருக்கு கீழ்படிகிறது. விழுந்து போவதற்குரியவன் மனிதனே அவன் விழத்தக்க நேரம் ஒன்று இருந்தது. ஆகையால் அவன் விழுந்து போனான்;. எல்லாம் அதன் மூலநிலையில் இருந்தது. ஆனால் மனிதனோ விழுந்தான். ஆகையால் அவனை சரியானதைச் செய்ய வைக்கவும் மற்றும் அவருக்குக் கீழ்ப்படியவைப்பதற்கும் தேவனுக்கு அவனுடன் போராட வேண்டியதாயிருக்கிறது. 12காலங்களில், சபைக் காலங்களின் வரலாறு ஊடாய்ப் பார்த்தால் அவருடைய கட்டுக்குள் முழுவதுமாக வைக்க ஒருவரை கண்டுபிடிப்பதே தேவனுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்சனையாகும். அவருக்குத் தேவை எல்லாம் ஒரு மனிதனே. அவர் எப்பொழுதுமே ஒரு நேரத்தில்; ஒரு மனிதனை மட்டும் உபயோகிப்பார். நாம் இதை கடந்த இரவுகளில் தியானித்தோம். ஒரு மனிதன் மட்டுமே‚ கூட்டம் அல்ல‚ அவருக்கு ஒருவர் தான் தேவை. அது தான் அவருக்குத் தேவை, ஏனென்றால் இரண்டு மனிதர்களுக்கு இரண்டு வெவ்வேறு எண்ணங்கள் இருக்கும். அவர் ஒரு மனிதனை மட்டுமே உபயோகிப்பார், அவன் மூலமாக அவர் தன்னையே பிரதிநிதித்துவமாக்குகிறார். அதைத் தவிர வேறுவிதத்தில் அவர் செய்யமாட்டார். பாருங்கள்? இப்பொழுது, இன்றைய நாளில் அவருக்கு ஒரு நபர் இருக்கிறார், அவரைக்குறித்து நாம் வாசித்தோம். பரிசுத்த ஆவியானவர். அந்த நபரைத் தான் தேவன் பூமியில் அனுப்பியிருக்கிறார், இயேசுகிறிஸ்துவின் ஆவி; தேவனுடைய ஆவி.அவருடைய சபையின் மூலமாக கிறிஸ்துவை அறிவிக்க மற்றும் வெளிப்படுத்த தேவஆவியை அனுப்பினார். (பாருங்கள்?) இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தை சபையின் மூலமாகத் தொடர... 13இப்பொழுது, நாம் சற்றுநேரம் நின்று நிதானித்துப் பார்த்தால் இது ஒரு அற்புதமான விஷயமாய் இருக்கிறது, ஆயினும் அது எளிமையாய் இருக்கிறது. 'நான் உள்ளே செல்லலாமா'' என்று இதை சிந்திக்கும் போது நமக்கு நடுக்கம் உண்டாகிறது, நமக்கு பயம் உண்டாகிறது, நமக்கு பதட்டம் மற்றும் சந்தேகம் உண்டாகிறது‚ அது அப்படி அல்ல. அது அவருக்கு ஒப்புக்கொடுப்பது பாருங்கள்? நீங்கள் ஒன்றுமில்லை என்று எண்ணி, உங்களை மற்றும்; உங்கள் எண்ணங்களை முற்றிலுமாக அவரை ஆளுகை செய்ய அனுமதியுங்கள். இப்பொழுது, நீங்கள் வெற்றுமனதோடு கிறிஸ்துவிடம் போங்கள் என்ற எண்ணத்தில் நான் சொல்லவில்லை. அந்த எண்ணத்தில் சொல்லவில்லை. நீங்கள் அவரிடம் சரியான சிந்தையோடும், பாவத்துக்கு வருந்துபவராகவும் மற்றும் தாழ்மையோடும் அவரிடம் செல்லுங்கள். பிறகு அவரிடம் சொல்லுங்கள் ஆண்டவராகிய இயேசுவே, 'இதோ உம்மிடத்தில் வருகிறேன்‚ “சீஷர்களிடம் 'உங்களுக்கு இன்னும் அநேக காரியங்களை சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை இப்பொழுது தாங்கமாட்டீர்கள்”, என்று உம்முடைய வார்த்தையில் இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது ஒருவேளை எங்கள்; நிலையாய் இருக்கலாம். எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 14தேவன் சிறிது வேறுபட்ட காரியத்தை எழுப்பினால், நாம் அதை மொத்தமாக மறுதலிக்கிறோம். அது சரியா தவறா என்று நாம்; வேதத்தை ஆராயாமல் அதில் ஒன்றுமில்லை என்று நாம் அதை துரிதமாகத் தள்ளிப்போடுகிறோம். நாம் இதைக் குறித்து ஆராயவேண்டும், இது சரியா தவறாஎன்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் நினைவு கொள்ளுங்கள், அவை தவறானதாய் இருந்தால்; மரித்துபோகும். ஏனெனில், 'என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்“ என்று இயேசு சொல்லியிருக்கிறார். அந்த சமயத்தில் இந்த மகத்தான கூற்றை கமாலியேல் கூறினான் என்று நான் நினைக்கிறேன். அது, 'தேவனால் உண்டாயிருந்ததேயானால் தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்'' என்றான். தேவனுடையதாய் இல்லை என்றால் எப்படியும் அழிந்துபோம். ஆகவே இதைக் குறித்து தியானியுங்கள் மற்றும் யோசியுங்கள். 15மேலும் 'பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது''... என்று அவர் இப்படியாக இங்கே சொல்லியிருக்கிறார். இப்பொழுது சிறிது காலம் முன்பு யாரோ ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, 'பரிசுத்தஆவியானவர்; அது நீங்கள் சிந்திக்கும் உங்கள் மனது அது பரிசுத்தஆவியானவர் என்று நீங்கள் நினைப்பதே'', என்றார். ஆனால் வேதம் இவ்வாறு கூறுகிறது, 'அவர் வரும் போது'', (அவர் அது தனிப்பட்ட பிரதிப்பெயர் பாருங்கள்), அவர் அந்த நபராகிய பரிசுத்த ஆவியானவர், தேவன் வரும் போது நான் உங்களுக்குக் கூறியதையெல்லாம் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 'அப்படி என்றால் பாருங்கள் சத்தியத்தை அறிய வேறு வழியே இல்லை. இப்படியாக மட்டுமே……, கலாச்சாரத்தினால் உங்களால் பெற்றுக்கொள்ள முடியாது, வேதபடிப்பின் அனுபவங்கள் மூலமாகவும் உங்களால் பெற்றுகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். நமக்கு அதை வெளிப்படுத்திக் கொடுக்க அவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார். பிறகு வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அவர் அறிவிப்பார், என்றும் அவர் சொல்லியிருக்கிறார். 16இப்பொழுது எபிரெயர் முதலாவது அதிகாரத்தில் இப்படியாக இருக்கிறது; 'பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக்கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் இயேசுகிறிஸ்து“ பாருங்கள்? அது பரிசுத்த ஆவியானவர் உரிமை கொள்கிறார். அதாவது சபையை உரிமைகோருவது, கிறிஸ்துவின் மூலமாய் சபை இயங்குவது, கிறிஸ்து சபைக்குள். பிறகு நீங்கள் அவரைப்போல் மாறுவீர்கள். நீங்கள் அவரைப் போல் இருக்கும்படியாக அவர் உங்களைப் போல் ஆனார், பாருங்கள்‚ அவர் உங்களைப் போல் ஆனார். நீங்கள் அவரைப் போல் ஆக. அது நமது புத்திக்கு மேலாக இருக்கிறது. அதை நம்மால் விவரிக்கமுடியாது. அதை முயற்சிக்காதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் சொன்னதால், அது முடிந்தது, அதுசரி தான் என்று சொல்லி அதை விசுவாசியுங்கள். 17இப்பொழுது ஒரு இளம் கிறிஸ்துவனாய், நான் எப்பொழுதும் இந்தக் கூற்றை சொல்லுவதுண்டு. அது என்னவென்றால், சபை என்னைப் பிடிப்பதற்கு முன் கர்த்தர் என்னைப் பிடித்துக்கொண்டதற்கு நான் மிகுந்த சந்தோஷப்படுகிறேன் என்பதே‚ நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று தெரியாது. ஆயினும் நான் தேவனுடைய வழிநடத்துதலுக்கும் மற்றும் அவருக்கு என் ஜீவியத்தை நான் ஒப்புவிப்பதற்கும் முன் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக இடைப்பட்டு, அவரால் என் ஜீவியத்தில் ஈர்க்கப்பட்டதற்கு நான் மிகுந்த நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நான் சிறியவனாக இருக்கும்போது ஏதோவொன்று இருக்கிறது என்று எண்ணினேன். அவர் என்னோடு பேசுவார், நான் அவரோடு பேசுவேன், மீண்டும் அவர் என்னோடு பேசுவார். பிறகு நான் கவனிக்க ஆரம்பித்தேன். அவர் என் சிறுவயதில் என்னிடம் சொன்னதெல்லாம் அது அப்படியாகவே கச்சிதமாக நடக்க ஆரம்பித்தது. அது நடக்கும், என்று அவர் சொன்னார். ஆகையால் நான் அது சத்தியம் என்று அறிவேன். 18நானோ இப்பொழுது ஒரு வயதானவனாக இருக்கிறேன். உலகத்தாரிடம் நின்று கர்த்தர் உரைக்கிறதாவது என்று என்னிடம் அவர் சொல்லி, கர்த்தரின் நாமத்தில் சொன்ன ஆயிரத்தில், ஆயிரங்களில் ஒன்றில் எப்போதாவது; உங்கள் விரலை வைக்கக்கூடுமா? (அவ்விதம் இல்லை) அது முற்றிலுமான சத்தியமும், நிறைவேறினதுமாக இருந்தது; அது நிறைவேறியது. எது செய்தது... எதற்காக நான் இதைக் கூறுகிறேன், பாருங்கள்‚ நாம் எல்லோரும் எரிமலை சாம்பலுக்கு ஒப்பானவர்களே‚ ஆனால் அது தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தம். ஆகவே என் மீது என்னால் நம்பிக்கை கொள்ளமுடியாது. நீங்களும் உங்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியாது. ஆனால் நாம் ஒன்றாகச் சேர்ந்து நம்மை ஆட்கொண்டவர் மீது நம்பிக்கை கொள்ளமுடியும். பரிசுத்தாவியானவர் நம்மை ஆட்கொண்டிருப்பதால் அதன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். நாம் அப்படி நம்பிக்கை கொள்ளுவோமானால் பலன்கள் வரும். 19அது எனக்கு ஆராய முடியாதது. என் நாட்களில், என்னுடைய உடைந்து போன ஜீவியத்தில் தேவன் செய்த சில காரியங்களை சொல்லுவேன் என்றால் அது வெறும் ஒரு மேற்புறத்தை சுரண்டிய அளவில்தான் சொல்லியிருப்பேன். நான் வேதாகமத்தை திறந்துவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்லுகிறேன். அவர் வார்த்தை, அவர் அதுவாகவே இருக்கிறார். பாருங்கள் இந்த வித்தானது எரிமலை சாம்பலுக்குள் ஆவிக்குரிய தன்மையில் வருகிறது. தேவன் ஆவியாய் வந்து சாம்பலுக்குள் கிரியை செய்கிறார். ஆகவே அது மனிதன் அல்ல, தேவன். அப்படியாக அவர் செய்த காரியங்களை நான் கண்டதை நேரம் எடுத்து எழுதுவேனானால் அது புத்தகங்களின் அநேக தொகுதிகளாகும். மேலும், அதை யோசிக்கும்; போது, எனக்கு இப்பொழுது ஐம்பத்தி மூன்று வயதாகிறது. என்னாலே தேவனுக்கு முன்னால், அவர் சபைக்கு முன்னால், இந்த வேதத்துக்கு முன்னால், அவருடைய கூட்டத்துக்கு முன்னால் ஒருபோதும் அவர் வார்த்தை தோல்வி அடைந்ததை நான் கண்டதில்லை என்று சொல்லுவேன். எப்பொழுதும் கச்சிதமாக குறித்த நேரத்தில் நிறைவேறும். 20எடுத்துக்காட்டாக அன்றொரு நாள் நான் மேற்கு நோக்கி வந்தபோது, அநேகர் அந்த ஒலிநாடாவைப் போட்டு கேட்டிருக்கிறீர்கள். மற்றும் அதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நான் இங்கு எதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் நான் காத்துகொண்டிருக்கிறேன். ஒரு வேளை நான் என் வீட்டுக்கு போவதற்கான நேரமாய் இருக்குமோ. அது அப்படியாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதுஅப்படியாக இருந்தால் எனக்கு பிறகு, வேறு ஒருவர் எழும்புவார். மற்றும் அந்த செய்தியை முன் கொண்டு போவார், அவர் வினோதமான நபராய் இருப்பார். ஆனால் இதற்கு பிறகு எழும்பி, செய்தியை எடுத்துக்கொண்டு செல்வார். நீங்கள் அதற்கு செவிகொடுங்கள். அதுவேதவசனமாய் இருக்கையில் அதோடே தரித்திருங்கள். அது அப்படி இல்லை என்றால், வேறு ஒரு பகுதி வருகிறது. ஏனெனில் நாம் கடைசிக்காலத்தில் ஜீவிக்கிறோம், இந்த நாட்களில் ஜீவித்ததற்கு நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஏனெனில், வேறு ஒரு நாட்களில் ஜீவிக்க நான் இந்த நாட்களை பரிமாற்றம் பண்ணமாட்டேன். உலகத்திலேயே இந்த நாட்கள் தான் மகத்துவமான நாட்களாக இருக்கிறது. வேறு எந்த ஒரு காலமும் இந்த காலத்துக்கு ஈடாகாது. ஓ, 'அப்படியாக மோசே, எலியா, பவுல், சீலா, மற்றும் கடந்துபோன நாட்களில் இருந்த அந்த மகத்தான விசுவாச வீரர்கள் எழும்புவார்கள் என்றால், மேலும் அவர்கள் சரித்திரத்து புத்தகத்தை எடுத்து அவர்கள் தீர்க்கதரிசனம் செய்தது நிறைவேறுவதைக் காண்பார்கள் என்றால், மற்றும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று காண்பார்கள் என்றால், ஒரு மணிநேரத்துக்குள் அவர்கள் சிறைச்சாலையில் போடப்படுவார்கள். ஒரு மணிநேரத்துக்குள் நிச்சயமாக, ஏனெனில் நேரம் சமீபித்து இருக்கிறது என்று அவர்கள் காட்டுவாசிகளைப்போல் வீதியில் எல்லா இடத்திலும் சுவிசேஷத்தை கடினமாக பிரசிங்கிப்பார்கள்'' இப்பொழுது இந்த இரவில் நாம் தேவமகிமைக்கு மிகக் குறைவாக உள்ளோம் என்பதைக் காண்போம். 21நான் இப்படியாக பயிற்சி செய்வேன். சபையை அணுகும் முன், பில்லி பால் ஜெப அட்டைகளை இந்த இரவில் இந்த சபைக்கு கொடுத்தானா? நான் சில நிமிடங்களுக்கு முன்புதான் டூசானிலிருந்து வந்தேன். அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? இப்பொழுது அவர்களை வரிசையில் கொண்டு வருவது, அது ஒரு சரியானவிதமாக இருக்காது, நாம் முயற்சிப்போம். மேலும் கிறிஸ்து தன் வார்த்தையை காத்துகொள்கிறார் என்ற வேதவசனத்தின் மேல்சாட்சி கொடுப்பதில் நான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளமாட்டேன். அவர் செய்தாக வேண்டும். அவர் செய்ய வேண்டும். பாருங்கள்?நான் செய்ய வேண்டியதில்லை ஏன் என்றால் நான் அழிவுள்ள ஜீவன் தவறுகளுக்கு உட்பட்டவன். அவர் அழிவில்லாதவர், தவறிழைக்காதவர். அவர் அவருடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும், (பாருங்கள்?) ஆனால் நான் என் வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டியது இல்லை. மற்றும் நீங்கள் உங்கள் வார்த்தையை காத்துகொள்ள வேண்டியதில்லை. ஆயினும் அவர் காத்துக்கொள்கிறார். ஓ, அவர் தன் வார்த்தையைக் காத்துக்கொள்வதற்கு கட்டுப்பட்டிருக்கிறார் என்று அறியும்போது அது உங்களிடத்தில் ஏதோ ஒன்று செய்யவில்லையா. 22தீர்க்கதரிசிகளை மற்றும் கோத்திர பிதாக்களை, தேவன் ஒவ்வொரு முறையும் சபை விலகிபோனபோது, அவர் யாரையாவது ஒருவரை அனுப்பி, அவர்களை உலுக்கி வார்த்தையண்டை திரும்பவும் கொண்டு போவார். சபையை எப்பவும் அதன் சரியான வரிசையில் நிற்க வைப்பார். அது தேவனுடைய கொள்கையாக இருக்கிறது. அதற்காக அவர் மனிதனை தேர்வு செய்வார் என்று நாம் இந்த வாரம் நம் வேதத்தினூடாய் பார்த்தோம். அதை செய்வதற்கு இப்பொழுது அவர் நட்சத்திரங்களை பிரசங்கிக்க தேர்வு செய்வாரனால் அதை எப்பொழுதோ செய்திருப்பார். அவைகளும் அவர் சித்தத்திற்கு மாறாக ஒருபோதும் போகாது. அவர் அப்படியாக சூரியனை அல்லது காற்றை பிரசிங்கிக்க தேர்வு செய்வார் என்றால் அவைகள் அவர் சித்தத்திற்கு மாறாக ஒரு போதும் போயிருக்காது, பாருங்கள், ஆனால் நாமோ சுயாதீனமாக தேர்வு செய்யும் பட்டியலில் இருக்கிறோம். நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படியே நடந்து கொள்ளலாம். ஆகையால் நாம் அவருக்கு மனவேதனை உண்டாக்குகிறோம், அவர் வழியை விட்டு விலகி நம்வழியைச் செலுத்தி அதன் மூலமாகப் போகின்றோம். பாருங்கள்? மேலும் நான் முன்பு சொன்னது போல் மனிதன் அவன் எப்பொழுதுமே தேவன் செய்தவற்றை என்றும் பாராட்டிக்கொண்டிருப்பான். அதே சமயம் அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புறக்கணித்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை சொல்லிக் கொண்டிருப்பான். (பாருங்கள்?) 23'ஓ தேவன் சிவந்த சமுத்திரத்தை திறந்து கொடுத்தார் கர்த்தருக்கு மகிமை, என்று மனிதன் இப்படியாகச் சொல்லுவான். அது சரி தான்“. ஆம், இயேசு மறுபடியும் வருகிறார். அல்லேலூயா. அது சரி தான், 'ஆனால் இன்றைய காரியத்தைப்பற்றி அவனிடம் பேசுங்கள்“, அதுவேறு ஒரு நாளுக்கானது என்று சொல்லுவான். பாருங்கள், எப்பொழுதுமே அவர் என்ன செய்தாரோ, என்ன செய்யப் போகிறாரோ என்று அதை பற்றி மட்டுமே (பேசுவான்); அவர் செய்து கொண்டிருப்பதை புறக்கணிப்பான்‚, அவ்வகையான நிலைகளில்தான் இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்தார். கச்சிதமாக, தேவன் வாக்களித்ததை அவர் செய்தார், மற்றும் அவர்கள் முன்பு அவர் நின்றபோது அவர்கள் அவரை இனம் கண்டு கொள்ளவில்லை. அவர் இந்த உலகத்தில் இருந்தார், இந்த உலகம் அவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகமோ அவரை இனம் கண்டுகொள்ளவில்லை. அதுசரிதான், 'அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்'', அது ஒரு மகிமையான காரியமாய் இருக்கிறது. 24கொஞ்சகாலம் முன்பு நடந்த ஒருதரிசனத்தை, உங்களிடம் பேச விரும்புகிறேன். எனக்கு சரியாகத் தெரியவில்லை, நான் இதைக் குறித்து எங்கோ ஒரு தனிப்பட்ட நபரிடத்தில் சொன்னது தவிர வேறு எங்கும் சொன்னதில்லை. நான் இந்த உலகத்திலே எனக்கு மகத்தான நபராய் இருந்த வரை எனது தாயாரை இழந்தேன். நான் எனது தாயை மிகவும் நேசித்தேன். நாங்கள் மிகுந்த ஏழையாய் இருந்தபோது, சாப்பிடுவதற்கு எதுவும் இருக்காது, அப்பா, ஒரு கடையில் சுத்தப்படுத்துகிற வேலை பார்த்து எங்களுக்கு சில ரொட்டிகளைக் கொண்டு வருவார், அதன் மீது காபியும் மற்றும் சக்கரையும் போடுவார், அம்மா அப்படியாக மேஜையை விட்டு எழுந்துபோவதை நான் பார்ப்பதுண்டு. அம்மாபசியில்லாதது போல் நடிப்பார்கள்; ஏனெனில் பிள்ளைகளுக்காக, நாங்கள் கொஞ்சமாவது சாப்பிடுவதற்காக. அநேகமுறை என்னை தூக்கியதும் மற்றும் எனக்காக அவர் செய்ததும், ஓ, அதை என்னால் எப்பொழுதுமே மறக்கமுடியாது, ஆனாலும் பாருங்கள் தேவன் அவர்களை எடுத்துக்கொள்ளும்போது, அவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார். தேவன் முழுவதுமாய் இரக்கமாய் இருக்கிறார். நான் அவரை அதற்காக நேசிக்கிறேன். 25என்னை சார்ந்த மக்கள் இறக்கும் முன், அவர்கள் இறப்பதை, நான் தரிசனத்தில் காண்பேன். அது, எப்பொழுதுமே அப்படியாக நடக்கிறது. எனக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருந்தபோது நான் என் சகோதரன் இறப்பதைப் பார்த்தேன். அவன் போவதற்கு இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தேன். அப்பொழுது நான் கிறிஸ்துவனாகக் கூட இல்லை. ஆனாலும் அந்த தரிசனத்தில் அப்படியாக என் சகோதரன் போவதைக் கண்டேன். என் தகப்பனார் போவதையும் கண்டேன். ஹாவர்ட்... அநேகருக்கு ஹாவர்ட்டை தெரியும். ஹாவர்ட்... அது நடப்பதற்கு இரண்டு வருடம் முன் நான் சொன்னது நினைவு இருக்கிறதா? 'ஹாவர்ட் அடுத்ததாக குறிக்கபட்டிருக்கிறாய்‚'' என்று நான் சொன்னேன். மேலும் நான், 'உன்னை சரிசெய்து கொள் நீ அடுத்ததாகப் போகப் போகிறாய்'' என்றேன். அவன் அப்படியாகவே அவனைச் சரிசெய்து கொண்டான். மிகச் சரியாகவே‚ பின்பு, சில காலம் முன்பு... 26பின்பு, சில காலம் முன்பு... இப்பொழுது இது அவபக்தியாக இருக்கும்படியாக சொல்லவில்லை. ஆனால் தேவனுடைய அக்கரையை காண்பிப்பதற்காக தேவன் பெரிய காரியங்களில் எப்படி இருக்கிறாரோ அதேபோல் தான் சிறுகாரியங்களின்மேல் அக்கரை கொள்கிறார். இதை இங்கே இருக்கும் சிறப்பான பிரசங்கிகளுக்கு பயனாக இருக்கும் படியாகவும் மற்றும் எனக்காகவும் இதைக் கூறுகிறேன். இப்பொழுது எல்லோருக்கும் பில்லிகிரஹாம் போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மற்றும் ஓரல் ராபர்ட்ஸ் போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நாம் பில்லி கிரஹாம்அல்லது ஓரல் ராபர்ட்ஸ் கிடையாது, நாம் தேவனுடைய ஊழியக்காரர்கள், அவர் நம்மை பொருத்தினகளத்தில் இருக்கிறோம். பாருங்கள்? அது சிறியதாக இருந்தாலும் அல்லது பெரிதாய் இருந்தாலும், அது எப்படி இருந்தாலும் தேவன் பார்வையில் ஒரே மாதிரியாக இருக்கும். நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு சரியாக நடக்க எப்பொழுதுமே கர்த்தரைப் பின்பற்றுவது மகத்தானதாக இருக்கிறது. 27நான் தேவனுக்கு சித்தமில்லாத ஐந்தாயிரம் மக்கள் உள்ள சபையை கொள்வதைக் காட்டிலும் தேவனின் சித்தத்தோடே இருக்கிற ஐம்பது மக்களை வெல்ல அல்லது சபையைக் கொண்டிருப்பதையே விரும்புவேன். நிச்சயமாக தேவனால் அவர் சித்தத்துக்குள் ஐம்பது வருடமாய் இல்லாத மனிதனிடத்தில் செய்வதைக்காட்டிலும் அவர் சித்தத்துக்குள் இருக்கும் மனிதனுடன் அநேக காரியங்கள் ஒருமணி நேரத்தில் செய்ய முடியும். பாருங்கள்? அவனோ இருட்டில் துப்பாக்கி சுடுகிறவனைப்போல் தடுமாறுகிறான், மற்றும் தள்ளாடுகின்றான். ஆனால் ஒரு மனிதன் நிஜமாகவே தேவனின் சித்தத்தில் இருக்கும் போது, அவனுடைய அழைப்பை அறிகிறபோது அவன் அதிலே தரித்து இருக்க வேண்டும். இப்பொழுது பாருங்கள் தரிசனங்கள், அதை எப்படியாக தேவன் கிரியை செய்கிறார். 28'பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, நான் சொன்னதை உங்களுக்கு வெளிப்படுத்துவார்'', இதை வேறு விதமாக கண்டுபிடிக்கத் தேவையில்லை. அவரே அதற்கு ஆக்கியோன், அவர் என்ன எழுதினார் என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். பாருங்கள்? அவர் எழுதினார் என்று வேதம் சொல்லுகிறது, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட அக்காலத்து மனிதர்கள் வார்த்தையை எழுதினார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் ஆக்கியோனாக இருப்பார் என்றால் நிச்சயமாக அதை நம்மை காட்டிலும் அவரால் நன்றாகவே வியாக்கியானம் தரமுடியும். அவரே அதற்கு வியாக்கியானம் தரட்டும். மற்றும் அவர் எவ்விதமாக வியாக்கியானம் கொடுக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?. இப்பொழுது, நீங்கள் ஜெப கூட்டத்திற்கு வரும் போது, இதைதவறவிடாதீர்கள். பாருங்கள்? இதை தவற விடாதீர்கள். எப்படியாக அவர் வியாக்கியானம் செய்கிறார்‚ அதை அவர் நிரூபிக்கிறார்‚ பாருங்கள். 29அதைத்தான் இயேசு, 'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே; என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அவைகளே நான் யார் என்பதைக் குறித்துச் சொல்கின்றன. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?'', என்றார். யார் கண்டணம் செய்ய முடியும், (பாவம் என்றால் அவிசுவாசம்). 'என்னை குறித்து எழுதப்பட்ட கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் கிரியைகளை செய்தேனேயானால் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும் அந்த கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். ஏனெனில் வார்த்தை அதைக்குறித்து சொல்லியிருக்கிறது“, அது தினம்தோறும் நாம் உபயோகப்படுத்தும் பொது அறிவு. பாருங்கள். இப்பொழுது தேவனுடைய வரங்களும் அழைப்பும் மனந்திரும்புதல் இல்லாமல் கொடுக்கப்படுகிறது. வேதம் அப்படியாகச் சொல்கிறது என்று நமக்கு தெரியும். 30ஏறக்குறைய இரண்டு வருடமாகிறது, நான் ஒரு காலையில் அப்படியாக வீட்டில் நடந்து கொண்டிருந்தேன், பின்பு நாற்காலியில் அமர்ந்தேன். இது இப்பொழுது விநோதமாக இருக்கும். தேவன் மிருகத்தையும் உள்ளடக்குகிறார். அந்த பரலோக தரிசனத்தை ஒருவிலையேறப் பெற்ற சகோதரர் சொன்னதுபோல், அதில் வேறு ஒரு பரிமாணம் செல்லும் அனுபவம் இருந்தது. இதைக் குறித்து நான் ஒரு முறை கூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். அது வியாபார புருஷர்களின் சத்தம் என்பதில் இருந்தது. அவர் அப்படியாக எனக்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் இப்படியாகச் சொன்னார், 'உம்முடைய தரிசனம் அது சரியாக இருந்தது, உங்களுடைய வியாக்கியானம் நீங்கள் சவாரி செய்த உங்கள் குதிரை உங்கள் தோள் மீது தலையை வைத்தது பற்றி சொல்லும்வரை'' அதுவும் சரியாகத்தான் இருந்தது. 'பரலோகத்தில் குதிரைகளே இல்லை, சகோதரர் பிரன்ஹாம் பரலோகம் மனிதர்களுக்காக மட்டுமே குதிரைகளுக்கு அல்ல'', என்று அவர் சொன்னார். நல்லது, நாம் அப்படியாக ஒருவர் இருப்பார் என்றால், அவர்களுக்கு நாம் எல்லாவற்றையும் விவரிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர்கள் ஏதாவது குறை கண்டுபிடிப்பார்கள். பாருங்கள்? தேவனைக் குறித்து நாம் விவரிக்க முடியாது. அவரை அப்படியே விசுவாசிக்க வேண்டும். ஆனாலும் இது அவருக்கு ஆறுதலாய் இருக்கும். நான் சொன்னேன், 'சகோதரனே நான் பரலோகத்தில் இருக்கிறேன் என்று சொல்லவில்லை. அந்த தரிசனத்தில் நான் இயேசு எங்கே என்று கேட்கிறேன், 'அதற்கு அவர்கள், அவர் இன்னும் அப்பால் இருக்கிறார்“ என்றார்கள். நான் ஒரு பரதீசில் இருப்பதுபோல் உணர்ந்தேன். ஆனாலும் இது உங்களுக்கு புரிந்துகொள்ள ஏதுவாக இதைச் சொல்லுகிறேன். இயேசுவானவர் வானத்தில் வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்து கொண்டு வருகிறார். மற்றும் பரலோகத்து எல்லா சேனைகளும் அவரைப்பின் தொடர்ந்து வெள்ளைக்குதிரைகள் மீது சவாரி செய்துகொண்டு வருவார்கள் என்று வேதம் இப்படியாக வெளிப்பாட்டுப் புத்தகத்தில் சொல்லுகிறது. ஆகையால் அங்கே பரலோகத்தின் பரலோகத்தில் சில குதிரைகள் இருக்கவேண்டும். 31தேவன் எல்லாவற்றிலும் அக்கரை கொள்கிறார். அவர் நீங்கள் செய்யும் சிறு காரியத்தில் அல்லது பெரிய காரியத்தில் அக்கரை கொள்கிறார். நீங்கள் சிறு மந்தையை எப்படி பார்த்துக்கொள்கிறீர்கள் அல்லது பெரிய மந்தையை மற்றவர்களை எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்று அவர் அதன் மீது அக்கரை கொள்கிறார். அவர் அக்கரை உள்ளவராய் இருக்கிறார். சில காலம் முன் எனக்குத் தெரிந்த பிரசித்தி பெற்ற ஒரு நல்ல சகோதரனும் நானும் ஒரு இடத்தில் மீன் பிடிக்கச் சென்றோம். நான் கூட்டங்கள் முடிந்து இளைப்பாறிக் கொண்டிருந்தேன். நாங்கள் நத்தையைக் கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். மற்றும் நாங்கள் சமைத்து சாப்பிடுவதற்கான மீன்களைப் பிடித்தோம் பின்பு, அன்று இரவில் நாங்கள் ட்ரவுட் மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தோம். மற்றும் தூண்டில் இரை தீர்ந்து போனது. அதனால் மத்தியான வேளையிலே நான் சிறயதாய் இருக்கும் நீல நிற மீன்களைப் பிடித்தேன். பாருங்கள்? பெரிய மீன்களை நாம் சாப்பிடலாம். இந்த சிறய மீன்கள் தூண்டில்களுக்கானவை. அப்படியாக நான் அந்த மீன் பிடிதூண்டிலைப் போட்டேன். அந்த படகில் இருக்கும்போது அந்த மீன்களை அப்படியாகப் பிடித்து வாளியில் போட்டுக் கொண்டிருந்தபோது, ஏதோவொரு ஒரு எண்ணம் என்னைத் தாக்கியது. இந்த வாலிபன், யெகோவா சாட்சிகள் குழுவில் இருந்திருந்தார். மற்றும் அவர் சகோதரன் சமீபமாக இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார். ஆகவே, அந்த இரண்டு பேரும் எங்களோடே இருந்தார்கள். மேலும் நாங்கள் எல்லோரும் மீன் பிடித்துக்கொண்டிருக்கையில் ஏதோவொரு எண்ணம் என்னைத் தாக்கியது, அதன்பின், 'உங்களுக்குத் தெரியுமா, ஏதோவொரு ஜீவன் அதாவது ஒரு சிறிய மிருகத்தோட உயிர்தெழுதல் இருக்கப்போகிறது'' என்று நான் சொன்னேன். 'அது ஒரு சிறிய மிருகம்'', என்றேன். 32இப்பொழுது, அநேகருக்கு நினைவிருக்கும், மோட்டார் வண்டியினால் இடிக்கப்பட்டு ஒரு சிறு பையன் மரித்து உயிர்த்தெழுவான் என்று வார்த்தை முன்னுரைத்தது. இன்று இரவு என்னோடு இங்கு இருக்கும் சகோதரர் ஜாக்மூர், அந்த சம்பவம் நடந்த போது பின்லாந்தில் என்னோடு இருந்தார். பாருங்கள்? இங்கு இருக்கும் அநேருக்கு நான் இதைக் குறித்துச் சொன்னது நினைவிருக்கும். (பாருங்கள்?) உங்களுடைய புத்தகத்தில் எழுதச் சொல்லியிருப்பேன். கவனிக்கவும், மேலும், சகோதரர் வுட் (அவருடைய மகன் போலியோவிலிருந்து சுகம் பெற்றான்) திரும்பி அவர் சகோதரரிடம், 'இப்பொழுது கவனி ஏதோவொன்று சம்பவிக்கயிருக்கிறது'' என்றார். நான் அப்படியாக மீன் பிடித்துக்கொண்டு இருந்தேன். பாருங்கள்‚ நாங்கள் மீன் பிடிதூண்டிலை மீன்களோடு எடுத்து வைத்தோம். அன்று இரவு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 'அங்கு சில சிறு நீல மீன்கள் உள்ளது'' என்று மறுநாள் காலையில் நான் சொன்னேன். மேலும், 'நீங்கள் ஏதோவொரு ஜீவனுடைய உயிர்த்தெழுதல் இருக்கும் என்று சொன்னீர்கள் அல்லவா'' என்று அவர் சொன்னார். நான், 'ஆம்'' என்று சொன்னேன். 33நான் உங்களிடத்தில் ஒன்று சொல்லுகிறேன், நான் என் வீட்டிலிருந்து வரும் முன் என்னுடைய சின்ன மகள்... உங்களுக்கு அது வேண்டுமானால், நீங்கள் வைத்து கொள்ளலாம் என்றார். (பாருங்கள்?) ஆனால் எனக்கு பூனை என்றால் பயம் மற்றும் அவைகள் இருக்கும் போது நீங்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் நாங்கள் எங்கள் வீட்டில்அதை வைத்துக் கொள்வதில்லை. மற்றும் நான் நினைக்கிறேன் அதைக் கண்டு நான் பயப்படுகிறேன் என்று பூனைக்குத் தெரியும். என் தகப்பனாருக்கும் பூனையைக் கண்டால் பயம் என்பது என்னுடைய சிறு மகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் பூனையை வைத்துக் கொள்வதில்லை. மேலும் என்னுடைய சின்ன மகள் வேறொரு சிறு பெண்ணோடு தெருவில் சோகமாக வீட்டிற்கு நடந்துகொண்டு வந்தாள் மற்றும் என்னிடம் சொன்னாள்,'அப்பா“, 'என்ன வேண்டும் தேனே'' என்று நான் கேட்டேன். 'ஒரு மோசமான காரியம் நடந்திருக்கிறது'' என்று அவள் சொன்னாள். 'என்ன ஆயிற்று?'' என்று நான் கேட்டேன். 'இதை நீங்கள் மட்டும் அறிந்தீர்கள் என்றால்'', என்று அவள் சொன்னாள். 'என்னிடம் சொல்'', என்று நான் சொன்னேன். 'யாரோ ஒருவர் பரிதாபமாக இருக்கும் ஒரு பூனையை இந்த சந்தில் விட்டுவிட்டார்கள்“ என்று அவள் சொன்னாள். மேலும்; 'அதனால் நடக்க முடியவில்லை இறந்து போகிற தருவாயில் இருக்கிறது”, என்று அவள் சொன்னாள். மற்றும்; 'அப்பா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அதை எடுத்து உணவூட்டி அதைப் பார்த்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டாள். நான், 'நிச்சயமாக வேண்டாம். நீ அதற்கு உணவு கொடுக்க விரும்பினால் செய். ஆனால் அது உன்னை பிறாண்டிவிடாதபடிக்கு கவனத்தோடு செய்'', 'நான் அந்த பூனையைப் பார்க்கட்டும்“ என்றேன். அப்படியாக அவர்கள் அந்த பூனையைக்கொண்டு வந்தபோது அதற்கு ஒரு பெட்டியை வைத்தேன். மறுநாள் காலை எங்களுக்கு நிறைய பூனைக் குட்டிகள் இருந்தது. 34அதன் பிறகு என்னுடைய சின்ன மகன் ஜோசப், நான் வெளியே கிளம்பிக் கொண்டிருக்கும் போது அதை கவனித்துகொண்டிருந்தான். ஓ, அவன் அவைகள் இப்படியும் அப்படியுமாக ஏறிக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறது என்று நினைத்து, பின்பு ஒன்றை அவன் கையால் ரொம்ப இறுக்கமாக பிடித்தான்,அதன் பிறகு அதை கீழே சிமெண்ட் தரையில் போட்டான். அது அந்த பிடி தாங்காமல் அப்படியாக உருண்டு கொண்டிருந்தது. 'அய்யோ“ என்று நான் நினைத்தேன். பிறகு நான் இப்படி சிந்தித்தேன், 'ஒரு வேளை நான் வீடு திரும்பும் போது நான் கண்டது அந்த சிறு பூனைக்குட்டியாக இருக்குமோ. 'உங்களுக்கு அந்த ஓப்போஸம் விலங்கு நினைவு இருக்கிறதா? அது அந்த பூனைக்குட்டியாக இருக்கும்“ என்று நான் நினைத்தேன். அதன் பின் அப்படியாக நாங்கள் ஒரு சிறுகுழியின்; அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். மற்றும் நாங்கள் சிறுமீன்களைப் போட்டு ஓரளவுக்கு பெரிய நீல மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தோம். 35சகோதரர் லாயில், அவர் சகோதரர் பங்க்ஸ்ன் சகோதரர் அவர் அப்படியாக பெரிய கொக்கி கொண்டிருந்த நூல் உள்ள தூண்டில்வைத்து அதனுள் நிறைய புழுக்களைக் கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் அந்த சிறிய நீல மீனை அதன் சிறுவயிற்றுக்குள் அந்த கொக்கியை விழுங்கவிட்டார். மேலும் அதை அப்படியே அந்த மீனை மேலே எடுக்க முயன்றபோது, 'இதை கவனியுங்கள்“, என்றார். அது ரொம்ப நீண்டதாக இருந்தது. மேலும் அவரால் அந்த கொக்கியை எடுக்க முடியவில்லை. இதற்கு வேறு வழி இல்லை அந்த மீன் நூலை வெட்டிவிட வேண்டியது என்று நான் யூகித்தேன். ஆனால் அவருக்கு அந்த கொக்கி வேண்டும் என்று எண்ணினார். ஆகையால் அப்படியாக இழுத்ததால் அதன் குடல் மற்றும் வயிறு எல்லாமும் வெளியே வந்தது. அவர் அந்த மீனை அப்படியாகத் தண்ணீரில் தூக்கிப் போட்டார். அது மூன்று அல்லது நான்கு முறை துடித்தது. பிறகு அங்கேயே கிடந்தது. 'உன் கடைசியான மூச்சை விட்டாய் சிறியவனே”, என்று அவர் சொன்னார். 'இதைக்காட்டிலும் சிறிய கொக்கியை உபயோகியுங்கள்'',என்று நான் சொன்னேன். 'லாயெல், அது கடிக்க ஆரம்பிக்கும்போது... அதை விட சிறியதூண்டில் முள், இருக்க வேண்டும்“ என்று சொன்னேன். அது கடிக்கத் தொடங்கும்போது இங்கே வைக்கப்பட்டுள்ள தூண்டிலை எடுத்து அது கடிக்கத் தொடங்கும் போது அதை அது விழுங்குவதற்கு முன் அதைப் பிடிக்க வேண்டும் என்று சொன்னேன். பாருங்கள், அதன் வாயருகில் செல்லும்போது அதைப் பிடிக்க வேண்டும். அதுதான் அவைகளைப் பிடிக்கும் கலை (sport) 'ஓ, நான் தவறான வகையில் இழுத்துவிட்டேன்?'' என்று சொன்னார். அவர் கொஞ்ச தூரம் சென்று சிலமுறைகள் முயற்சி செய்தார். மூன்று அல்லது நான்கு முறைகள் அது தவறிவிட்டது. அதன் பிறகு அதை வைத்துவிட்டு, 'மறுபடியும் அதை அது விழுங்கவிட்டுவிடப் போகிறேன்'' என்று சொன்னார். 36ஆகவே இந்த சிறிய மீன் கிட்டத்தட்ட முப்பது நிமிடமாக இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. மேலும்அந்த அலைகள் அப்படியாக எழும்பி வந்து கொண்டிருந்தது. நான், 'நாம் சீக்கிரமாக இங்கே இருந்து போக வேண்டும். நமக்கு ஒரு வாளி நிறைய மீன் இருக்கிறது, ஆகையால் நாம் இங்கு இருந்து கிளம்ப வேண்டும்'' என்றேன். மேலும் நான் என் மீன்தூண்டிலை இழுத்தேன். லில்லி இலைகள் மத்தியில் அங்கே சிறு சிகப்பு நிறம்கொண்ட வயிறுள்ள மீன்கள் இருந்தன. ஆகவே நான் அந்த தூண்டிலை அதனூடாக அதை இப்படியும் அப்படியுமாக அதன் மேலாக எடுத்துக் கொண்டிருந்தேன். இதை நீங்களும் மற்றும் ஸ்திரீகளும் மீன் பிடிப்பதைப் பற்றி அறிவீர்கள். நான் அப்படியாகச் செய்து கொண்டிருக்கும்போது, ஏதோவொன்று அந்த மலைப்பகுதிகள் ஊடாக வந்தது, அது ஏதோவொரு பலத்தகாற்றைப் போல், அது என்னூடாகச் சென்றது. நான் அந்த தூண்டிலை கீழேபோட்டு மற்றும் படகில் எழுந்து நின்று சுற்றிப் பார்த்தேன். பிறகு ஒரு சத்தம்,' அந்த சிறு மீனைப் பார்த்தாயா?'', என்று சொன்னதைக் கேட்டேன். அது அப்படியாக அங்கே இருந்தது. 'அந்த சிறு மீனைப் பார்த்தாயா'' என்று அவர் சொல்லும்போதே, அங்கே அதன் சிறு துடுப்புகள் விறைத்துப்போன நிலையில் அப்படியாக அரை மணிநேரமாய் அந்ததண்ணீரில் கிடந்தது என்று சொன்னேன். வேதபுத்தகம் இங்கே திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாருங்கள். 'அதனோடே பேசி அதனுடைய ஜீவனை திரும்பக் கொடுக்கும்படியாக“ அவர் சொன்னார். பிறகு நான், 'சிறுமீனே இயேசுகிறிஸ்து நாமத்தில் நான் உன் ஜீவனை திரும்பக் கொடுக்கிறேன்“, என்றேன். அந்த மனிதர்கள் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறு மீன் அப்படியாகத் திரும்பி தண்ணீரில் ஊடாக நீந்திச் சென்றது. அவர்களுக்கு மயக்கமுற்ற அளவுக்குச் சென்றது. லாயெல் தன் முகத்தை தண்ணீரில் கழுவச் சென்றார். 'நான் கொஞ்ச நேரத்தில் விழித்தெழுவேன், நான் கனவு காண்கிறேன்“ என்று எனக்குத் தெரியும் என்றார். 'நீங்கள் கனவு காணவில்லை'', என்று நான் சொன்னேன். அந்த சமயத்தில் என்னிடத்தில் ஜெபத்திற்காக வலிப்பு உள்ள பிள்ளைகள் முப்பது அல்லது நாற்பது பேர் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது தேவன் எவ்வாறு அந்த வலிப்பு உள்ள பிள்ளைகளை விட்டுவிட்டு அந்த சிறு மீனை திரும்பவும் கொண்டு வந்தார். அது எதைக் காட்டுகிறது என்றால், அவர் எல்லாவற்றின் மேலும் அக்கரை உள்ளவராய் இருக்கிறார் என்பதே‚ 37ஆயிரம் குஷ்டரோகிகள் தேசத்தில் இருக்கும் போது, அவர் எதனால் தன் வல்லமையை அந்த அத்திமரத்தை சபிக்க உபயோகப்படுத்த வேண்டும். மேலும் அவர் அநேக குஷ்டரோகிகளைக் கடந்துசென்று அந்த அத்தி மரத்தின்மேல் சாபத்தை வைத்தார். 'எந்த மனிதனும் உன்னிடத்தில் புசிப்பதில்லை“, என்றார். பிறகு அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று. அவர் மரத்தின் மீது அக்கரை கொள்கிறார் என்று காண்பிப்பதற்காக அவர் வல்லமையை உபயோகித்தார், அவர் மீனின் மீது அக்கரைகொள்கிறார், அவர் உங்கள் மீது அக்கரைகொள்கிறார். அவர் என் மீது அக்கரை கொள்கிறார், அவர் தன் வார்த்தை வெளிப்படுவதைக் காண அக்கரைகொள்கிறார். மற்றும் அவர் அதைச் செய்வதற்கு நம் மீது சார்ந்து இருக்கிறார். ஏனென்றால் நாம் அவருடைய பிரதிநிதிகள். நம்மில் எதுவும் இல்லை அவர்தான் எல்லாமே‚ நாம் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரோடு நடக்க வேண்டும். 38ஒருகாலையில் நான் ஒரு தரிசனம் கண்டேன். அதில் ஒரு பெரிய மிருகம் அந்த மலைப்பகுதியில் படுத்திருப்பதைப் பார்த்தேன். அது ஒரு மிகப்பெரிய மிருகம் கொம்புகள் வைத்துக்கொண்டிருந்தது. நான் இந்த தரிசனத்தில் வேட்டைக்குச் சென்று இருக்கிறேன். அப்பொழுது நேரம் பத்து அல்லது பதினொரு மணி இருக்கும், நான் நழுவிச் சென்று அந்த மிருகத்தைச் சுடுகிறேன். அதன் பிறகு சாலையில் திரும்ப போய்க் கொண்டிருந்த போது ஒரு மிகப் பெரிய கொடூரமான கரடி எழும்பி என்னை நோக்கி வருகிறது. அதையும் சுடுகிறேன். பிறகு அந்த கொம்புகளை அவர்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள். ஒரு சிறிய கரம் ஒன்று அதை அளவை நாடாவில் எடுப்பதையும் அடிபாகத்திலிருந்து கொம்பின் நுனி வரை அது நாற்பத்தி இரண்டு அங்குலம் என்று காண்பிக்கிறதையும் நான் கண்டேன். நான் அந்த மாதிரி மிருகத்தைக் கண்டதே இல்லை. அதன் கொம்புகள் கூர்மையாக ஆனாலும் அது பார்ப்பதற்கு மானைப் போல் இருந்தது. அது எப்படியும் இரண்டு அல்லது மூன்று மான் அளவு இருக்கும். நான் அதைப் போல் இதுவரையும் கண்டதேயில்லை. ஏதோவொரு நாளில் இந்த சம்பவம் நடக்கும் என்று சொல்லி நான் அதை எழுதிக் கொண்டேன். 39நான் என்னுடைய சிநேகிதனோடு கென்டக்கிக்கு சென்றிருந்தேன். சகோதரன் மைனர் ஆர்கன்பிரைட் என்னை தொலைபேசியில் அழைத்து, 'சகோதரன் பிரன்ஹாம் அலுவலாக இருக்கிறீர்களா?“ என்றார். நான், 'அந்த அளவுக்கு இல்லை எனக்கு இரண்டு வாரம் இருக்கிறது. அதை நான் விடுமுறையாக எடுத்துக்கொண்டேன்“ என்றேன். வழியில், 'கனடாவுக்கு அங்கு இருக்கும் அலாஸ்க்காவிற்கு என்னோடு வாருங்கள்'', என்றார். அங்கு ஆன்கரேஜ் மற்றும் பேர் பங்க்ஸ்ல் புருஷர்கள் வியாபார கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்த நாங்கள் விரும்பினோம். 'கேட்பதற்கு நலமாக இருக்கிறது, அதைச் செய்வதற்கு எனக்கு நேரம் கிடைத்தால்'' என்றேன். அவர், 'சகோதரன் பிரன்ஹாம், இதை நீர் செய்வீரானால், நான் உங்களை ஒரு நல்ல பெரிய கொடூரமான கரடி வேட்டைக்கு கூட்டிச்செல்வேன்“ என்றார். 'அது நன்றாக இருக்கிறது“,என்று நான் சொன்னேன். 'ஓ, ஓ, அந்த தரிசனம் பாருங்கள்?அப்படியானால் இது தான் அது என்று நான் யோசித்தேன் 40'ஒரு அருமையான பெரிய கொடூரமான கரடி வேட்டை“, என்று சொன்னேன். 'இது ரொம்ப அருமையாக இருக்கிறது நான் அந்த வேட்டைக்காகச் செல்லவில்லை. ஆனால் நாம் அங்கு இருக்கும் போது அங்கு இருக்கும் வழிகாட்டிகள் என்னை இலவசமாக கூட்டிக்கொண்டுபோக விரும்பினர். ஆகவே, நான் மிகுந்த சந்தோஷத்துடன் போவேன்”, என்றேன். அவர், 'அவர்கள் செய்வார்கள்; எல்லாவற்றையும் நாம் ஒழுங்குப்படுத்த வேண்டும்'' என்றார். நான், 'பொறுங்கள் நான் இதைக் குறித்து ஜெபிக்க வேண்டும்“ என்றேன். நான் அந்த நாளில் காட்டுப்பகுதிக்குச் சென்று, அதைப்பற்றி ஒவ்வொரு முறையும் ஜெபித்த போது நான் அந்த காரியத்தில் இருந்து விலகிப்போய்க் கொண்டிருந்தேன். நான் நினைத்தேன் இது வினோதமாக இருக்கிறதே. பிறகு இரண்டு நாட்கள் கழித்து நான், 'வரவில்லை“ என்று சகோதரன் ஆர்கன்பிரைட்டை அழைத்துச் சொன்னேன். 'சகோதரன் பிரன்ஹாம் எல்லாவற்றையும் இப்பொழுது ஒழுங்குபடுத்த ஆரம்பித்துவிட்டோம்“ என்று அவர் சொன்னார்.' எதுவும் செய்யாதீர்கள் என்று நான் சொன்னேன். பரிசுத்த ஆவியானவர் அதை கண்டனம் செய்கிறார், மேலும் நான் அவரிடம் அந்த தரிசனத்தைப் பற்றிக் கூறினேன்“. எனக்குத் தெரியவில்லை சகோதரர் ஆர்கன்பிரைட்; இதுரொம்ப வினோதமாக இருக்கிறது. அவர் அங்கே நான் போவதற்கு அனுமதிக்கவில்லை... 'ஆனாலும் பாருங்கள் அது அந்த இடமாக இருக்கும் என்று தோன்றுகிறது'', என்றேன். மேலும், 'நாம் போவதற்கு எல்லாமே ஆயத்தப்பட்டிருக்கிறது'' என்று அவர் சொன்னார். நான், 'இப்பொழுது சகோதரன் ஆர்கன்பிரைட்டை அநேகர் காண்பீர்கள். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் வெளியூர் கூட்டங்களுக்கு என்னுடன் செல்ல ஆயத்தமாக அவர் இங்கு வரப் போகிறார்“. ஆகையால் இந்த சம்பவத்தை நீங்கள் அவரிடம் கேட்கலாம் என்றேன். 'இல்லை என்னால் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவர் வேண்டாம் என்று சொல்கிறார்“, என்றேன். 41எவ்வளாவாக அது பார்ப்பதற்கு நலமாகத் தெரிந்தாலும் கீழ்படிவதே சிறந்தது. தேவனுக்கு சித்தம் இருந்தால் நான் அந்த மாதிரி காரியத்தை நாளை இரவில் பிரசங்கம் பண்ணத்தக்கதாக இருக்கிறேன். இப்பொழுது நினைவுகொள்ளுங்கள். எவ்வளவாக அது பார்ப்பதற்கு நலமாக தெரிந்தாலும் தேவன் அதில் இல்லை என்றால் அதனை விட்டு விலகி நிற்க வேண்டும். எவ்வளவாக அது கவர்ச்சியாக இருந்தாலும் அதனை விட்டு விலகி இருங்கள், செழிப்பாக இருந்தாலும் தேவன் அதில் இல்லை என்றால் அதை விட்டு விலகி இருங்கள், அதை விட்டு விலகி இருங்கள். இப்பொழுது தேவனுக்கு சித்தம் இருந்தால் நாம் அதைக் குறித்து நாளை இரவு பேசுவோம். நான் வீட்டுக்குப் போனபோது பில்லி (என்னுடைய மகன்), 'அப்பா நீங்கள் கடந்த இளவேனிற்காலம் சௌத்விக் என்ற வேட்டைக்காரனுடன் வேட்டையாடச் சென்றீர்களே‚ உங்களுக்கு நினைவு இருக்கிறதா?'', என்றான். நான், 'ஓ, அந்த யூக்கான் கீழே அந்த இடத்திலே'' என்றேன். 'ஆம்'' என்று அவன் சொன்னான். 'அவரிடத்தில் இருந்து உங்களுக்கு கடிதம் உள்ளது என்று சொன்னான். அவர் சகோதரர் எட்டிபிஸ்கல் அவர் வடமேற்கு தேசத்தில் உள்ள ஊழியக்காரர்கள் சங்கத்தின் தலைவனாயிருக்கிறார், ஒரு நல்ல வாலிபன். ஒரு வேளை இந்த கூட்டத்தில்அவர் இங்கு இருக்கலாம். அவர் இந்த வழியாக வருவதாகச் சொன்னார் ஒரு நல்ல வாலிபன், அவருக்கு ஒரு அருமையான குடும்பம் உண்டு, அவர் அங்கேக்ரீ இந்தியர்களுக்கு ஊழியம் செய்து கொண்டு இருக்கிறார். நான் கடந்த முறை இலையுதிர் காலத்தில்; அவரோடு இருந்தேன். பிறகு (ஒருவேளை கடந்த கோடையில்), 42எட்டி, அவருடைய கிறிஸ்துவுக்குள் மனம் மாற்றப்பட்ட பட் என்ற ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவருடைய மனைவி ஒரு தீவிரமான பெந்தெகொஸ்தேயாவார். பட் ஒரு பண்ணையாளர். அவர் சமீபமாக இங்கு வந்தார். இந்த இடத்தில் இந்தியர்களை துரத்தி அவர்களுக்கு வேறு ஒரு தனியாக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து, அவர்கள் இருந்த இடத்தை இவருக்கு ஒதுக்கிக் கொண்டார். இது ஒரு முன்னூறு சதுர மைல்கள் அல்லது அதற்கு மேலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த இடத்தை கனடியன் அரசாங்கம் அவருக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்;. 43அந்த இளவேனிற்காலத்தில், நான் அங்கு இருந்த போது கூட்டங்கள் முடிந்த பிறகு கரடி வேட்டைக்குப் போனோம். ஆனால் அந்த மே மாதத்தில் உலர்ந்த சூடான காற்று அதை தடை செய்தது. அவர் ஒரு போதும் கூட்டங்கள் பற்றி கேள்விப்பட்டது இல்லை, எடி அதைக்குறித்து அதிகமாக சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவர், 'தேவன் இன்றைக்கும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறாரா? மற்றும் என்ன நடக்கப்போகிறதோ அதை முன்னதாகவே காண்பிக்கிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா? என்றார். எடி, 'அது சரியே'', என்றார். ஆகவே, அவர் என்னிடம் அப்படியாக பேசிக் கொண்டிருந்தார். அவர்,'எனக்கு ஒரு சகோதரன் காக்காய் வலிப்பு வியாதியுடையவனாய் இருக்கிறான். நீங்கள் மட்டும் அவனிடம் போவீர்கள் என்றால் அல்லது அவனை உங்கள் கூட்டத்துக்குள் மட்டும் என்னால் அழைத்துவர முடியுமானால், நான் விசுவாசிக்கிறேன் அவன் சுகம் பெற்றுக்கொள்வான்“, என்றார். மேலும், 'அவனுடைய ஜீவியம் முழுவதுமாய் இது இருக்கிறது” என்றார். 'ஒரு வேளை அப்படி நடக்கலாம்', என்று நான் சொன்னேன். அங்கு அந்த பருவகாலத்தில் இருளானது தாமதமாகும். சூரியன் மெதுவாக இறங்கும். நீங்கள் நடுஜாமத்தில் கூட செய்தித்தாள் படிக்கலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். பாருங்கள், மேலும் மே மாதகடைசியில் சூரியன் அஸ்தமிக்காது. அது மறையாது. ஒரு பத்து நிமிடம் மறைவதுபோல் இருக்கும் மறுபடியுமாக வெளியே வரும். ஆகையால் நாங்கள் களைப்பாக இருக்கும் போது உறங்குவோம். 44நாங்கள் அங்கு இருந்து வெளிவரும் சாலையில், சில இந்தியர்களை சந்தித்தோம். நான் அவர்களின் அந்த வயதான தலைவனைச் சந்தித்தேன். அவர்கள், அவரை அங்கு அவர்களோடே தரிக்கவைத்துக் கொண்டார்கள். ஏனெனில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் பிள்ளைகள் இறந்தபோது மரக்கட்டைகளால் அடக்கம் செய்கிறார்கள், அவர்கள் இறக்கும் போது மரத்தில் தொங்கவிடுகிறார்கள். அது அவர்களுடைய மதசம்பிரதாயம். ஆகவே அவர்கள் அவர் குடும்பத்தை அவர்களோடு தரிக்க வைத்தார்கள். நல்ல வயதான மனிதன் தொண்ணூறு வயதைக் கடந்தவர், அப்படியாக அவர் பிள்ளைகளைப் போல் அந்த குதிரையின் மேல் அமர்ந்து கொண்டிருந்தார். நாங்கள் அடுத்த நாள் அங்கு இருந்து புறப்பட்டோம். 'இப்பொழுது உங்களால் இந்த வழியாக கடந்து செல்ல முடியவே முடியாது“, என்று அவர் சொன்னார். 'நீங்கள் மலைகளின் வழியாகத்தான் செல்ல வேண்டும்” ஓ, அது ஒருநூறு மைலுக்கு மேல் போக வேண்டும். அந்தப் பாதையைப் பிடிக்க நேரமானதால் எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் திரும்பினோம். 45அப்படியாக நாங்கள் திரும்பச் செல்கின்றபோது, பட் சில இளம் குதிரைகளை வைத்து இருந்தார். அதில் சிலவைகள் சிதைந்துப்போன சேற்றில் இறங்கியது. நான் எட்டியோடு போய்க்கொண்டே பேசி கொண்டிருந்தேன். பட் அவர் தான் முன்னே போகும் குதிரையை சேற்றிலிருந்து அதை மீட்க முயற்சி செய்து கொண்டு இருந்தார். நாங்கள் இருபத்தோரு தலைகள் (டுவெண்ட்டி ஒன்ஹெட்) என்ற வகையான குதிரை வைத்து இருந்தோம். நான் அந்த கயிற்றை அதன் மேலாக போட்டு அதை இழுத்தேன். நான் அவ்வாறு செய்கின்ற வேளையில் என்னுடைய குதிரை அந்த சேற்றில் இறங்கியது. நான் அப்படியாக அதை எடுக்க முயலும்போது என் மீது முழுவதுமாக சேறு ஆயிற்று. பிறகு நான் என் குதிரை மேல் உட்கார்ந்து என் மேலுள்ள சேற்றை எல்லாம் அகற்றி அங்கு இருந்து புறப்பட்டோம். அப்பொழுது என் முன் இருக்கும் அந்த மலைப்பகுதில் ஒரு வாலிபன் இறங்கி வந்தான். நான் அவனைப் பார்த்து என் குதிரையை நிறுத்தினேன். அவன் அப்படியே கீழே விழுந்து காக்காய் வலிப்பால் மேலும் கீழுமாய் புரண்டு, வாயில் இருந்து நுரை வந்து, ரொம்ப ஆக்ரோஷமாக எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு இருந்தான். பிறகு அமைதியானான்; நான் சாலமான்டரைப் (தீயில் வாழும் பல்லியைப்போன்றது; புராணங்களில் சொல்லப்படுவது) பார்த்தேன். அவன் சட்டை நெருப்பில் எரிகிறதைப் பார்த்தேன். 46எடி என்னை விட சிறுதளவு தூரத்தில் அப்பால் இருந்தார். அவர் இன்னொரு இளம் குதிரையை வழிவிலகிப் போகாதபடி அதன் மேல் இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சித்தார். நான் எட்டியிடம் சென்றேன். அவருடைய குதிரையை சமாதானபடுத்தினேன். நான், எடி என்னிடம் பட்டுக்காக கர்த்தர் உரைக்கிறதாவது இருக்கிறது என்றேன். அவர், 'சகோதரன் பிரன்ஹாம், என்ன ஆயிற்று“ என்றார். நான், 'ஒரு தரிசனம், நான் அவருடைய சகோதரரைக் கண்டேன்“ என்றேன். அவர், 'ஓ, அதைப் பிடியுங்கள்'' என்றார். நான், 'குதிரையை பிடித்துவையுங்கள், நான் என் குதிரையைவிடுவேன். மற்றும் முன் போவேன். நீங்கள் அந்த குதிரைகளை இப்படியாக கொண்டு வாருங்கள். நான் அவைகளை அந்த மலையின் பக்கமாக நிறுத்திப் பிடிக்கிறேன்“,என்றேன். நான் குன்றின் வழியாக என் குதிரையோடு வந்து அதன் மீது ஏறி அதன் சேனத்தை பிடித்தேன். நான், 'பட்' என்றேன். அவர், 'சொல்லுங்கள் சகோதரன் பிரன்ஹாம், என்றார். நான், 'உங்களிடத்தில் ஒன்று சொல்ல வேண்டும், என்றேன். உங்கள் சகோதரர்“, (நான்அந்த காரியத்தை விவரித்தேன்) என்றேன். அவர், 'ஆம், யார்இதை உங்களுக்குச் சொன்னது“, என்றார். நான், 'ஒருவரும் சொல்லவில்லை,தேவன் எனக்கு அவனைக் காண்பித்தார்“ என்றேன். மற்றும், 'நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா?“ என்றேன். அவர், 'நிச்சயமாக சகோதரர் பிரன்ஹாம்“, என்றார். நான், 'பட்டணத்தை விட்டு என்னூறு மைல்கள் தூரத்தில் இருக்கிறோம், உங்களுடைய சகோதரரை இங்கு வரச் சொல்லுங்கள். அதன் பிறகு அவன் முதல்தரம் வலிப்பினால் விழும் போது……, மேலும் நான் சொன்னேன், 'அவனுக்கு இது இரண்டு வயதில் இருந்து இருக்கிறது. நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் அது பரம்பரையாக உங்கள் குடும்பத்தில் இருக்கிறது. உங்களுடைய தாத்தாவுக்கு இருந்தது“, என்றேன். அவர், 'அது உண்மை. அது சரியே“, என்றார். மேலும், 'இப்பொழுது இந்த வாலிபன் காக்காய் வலிப்பினால் விழும்போது அவன் போட்டு இருக்கும் அந்த சட்டையை எடுத்து நெருப்பில் தூக்கிப்போடச் சொல்லுங்கள். இதை நான் இயேசுகிறிஸ்து நாமத்தில் அவர் வார்த்தையின்படி செய்கிறேன் என்று சொல்லுங்கள். அதன் பிறகு அவன் அதை நம்பும் மட்டும் அவனுக்கு எப்பொழுதுமே அது வராது, என்றேன். அவர் அப்படியாக கைகளை உயர்த்தி உரக்ககத்தினார். பின்பு, 'இதை நான் எப்பொழுதுமே பார்த்ததில்லை. ஆனால் நீர் நிச்சயமாக என் சகோதரர் எப்படி இருப்பான் என்று சொன்னீர். மற்றும் என்னுடைய தாத்தா பற்றிய உண்மையைச் சொன்னீர்“, என்றார். நான், 'அது சரியே“, என்றேன். 47நாங்கள் அங்கேயிருந்து கிளம்பிய பிறகு அவர் சகோதரனை வரவழைத்தார், மேலும் அவர் காலையில் பாதை ஒன்றை ஆயத்தம் பண்ணக்கிளம்பினார். அவர் சகோதரர் பேருந்தில் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை அலஸ்க்கா நெடுஞ்சாலை வழியாக வருவார். அவர் வந்து இருந்தார். மற்றும் பட்டின் மனைவி லைலா ஒரு சிறிய ஸ்திரீ. அவர் ஒரு குடும்பத்தின் துணிகளை துவைத்த பிறகு தேய்ந்து போன சோப்பைப் போல இருக்கிறார். ஒரு சிறிய மென்மையானஸ்திரீ. அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறது. ஆகவே பட் அவருடைய குதிரைகளை சரி செய்யப்போனார். ஏனெனில் எங்களையும் மற்றும் அவருடைய வேட்டைக்காரர்களுடன் அதன் வழியாகச் செல்ல அவர் ஒருபாதையை ஆயத்தப்படுத்தச் சென்றார். 48அவர் சென்ற பிறகு அவருடைய சகோதரர் இன்னும் நல்ல உடையில் இருந்தபோதே அவர் வலிப்பில் விழுந்தார். அமெரிக்கர்கள் இங்கு ஒரு நெடுஞ்சாலை கட்டிய போது இருந்த ஒருபழைய ராணுவக்குடியிருப்பில் இவர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கே ஒருபெரிய பழைய நெருப்பூட்டும் இடத்திதை சமைப்பதற்கு உபயோகபடுத்தினார்கள், மேலும் அவன் அந்த வலிப்பு வரும்போது ஆக்ரோஷமாக இருந்தான். சிறிய லைலாவுக்கு அவனைக் கண்டு மரித்துவிடுவானோ என்று மிகுந்த பயத்துடன் இருந்தாள். அவள் அப்படியாக அங்கு இருந்து வெளியேறுவதற்கு ஜன்னலையோ அல்லது வேறு எங்காவது சரிசெய்ய முயற்சித்தாள். அப்படியாக அவள் வெளியேற முயலும்போது, அவள் அந்த டாவ்சன்க்ரீக் கூட்டத்தில் இருந்திருந்ததால் அவள் இதைக் குறித்து சொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, அவள் வேகமாக அவனிடம் சென்று பெரிய நபரான அவன் மீது ஏறி அவன் முதுகுப்புறம் சட்டையை உருவினாள், அந்த வெள்ளை நிறசட்டையிலிருந்து அந்த பொத்தான்கள் பிய்த்துவந்தது பின்பு அந்த அடுப்பு அருகே சென்று, 'இதை இயேசுகிறிஸ்து நாமத்தில் கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரம் எங்களுக்கு சொன்னதைப் போல் செய்கிறேன்'', என்று சொல்லி எறிந்தாள். அதன் பிறகு அவனுக்கு ஒரு முறை கூட அவ்வாறு வலிப்பு வந்ததில்லை. அது முடிந்தது. 49அவர் ஒரு இலவசமான வேட்டைக்குச் செல்ல என்னை அழைத்தார். நான் எப்பொழுதும் இலவசமான காரியங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருப்பேன். நல்லது, 'நான் செல்வேன்'', தேவன் என்னை செல்ல அனுமதிக்கிறாரா என்று நான் பார்ப்பேன் என்று சொன்னேன். நான் ஜெபித்தேன். ஜெபத்தை விட வேறு காரியம் எதுவும் இல்லை. எல்லா காரியங்களும் அதற்கு சாதகமாக அதன் ஊடாகச் சென்றது. நான் சகோதரன் பிரெட்சாத்மனைக் கூட்டிகொண்டு போனேன். அவர் இந்த கூட்டத்தில் எங்கேயோ இருக்கிறார், 'எங்கே இருக்கிறீர்கள் பிரெட்''? அதோ அங்கு இருக்கிறார்.ஆம், அவர் எங்கள் சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவர். இது நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது என்பது சகோதரன் பிரெட்டுக்குத் தெரியும். அது சரிதானே சகோதரன் பிரெட்? மற்றும் சகோதரர் சிம்ப்சன் என்று நான் நினைக்கிறேன். இந்த இரவுப்பொழுதில், இந்த கட்டிடத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இது நடப்பதற்கு முன்னதாகவே சொல்லப்பட்டது என்று தெரியும்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். அதோ இருக்கிறார்கள்; கச்சிதமாக என்ன நடக்கப் போகிறது என்பது சபைக்கு முன்னதாகவே சொல்லப்பட்டது. இது தான் அந்த சமயம் என்று எனக்குத் தெரியாது. 50ஆகவே நான் அலாஸ்க்கா நெடுஞ்சாலை சென்றேன். மற்றும் போகும் வழியில் சகோதரர் பிரெட் கடமான் வேட்டைக்காக அவருடைய சிநேகிதன் வீட்டில் நின்றுவிட்டார். நாங்கள் இருக்கும் இடத்திற்கு கடமான் ரொம்பவும் அரிது மற்றும் நாங்கள் போகும் இடம் செம்மறியாடுகள் இருக்கும் தேசமாகும். மேலும் நான் ஒரு சிறிய எழுது கோல் அல்லது அழுக்குபடிந்த காரின் காற்றுத்தடுப்பு கண்ணாடியில் வரைந்தேன். நான் சொன்னேன், 'இப்பொழுது சகோதரர் பிரெட், இது தான் அதற்கு நேரமாய் இருக்குமானால் அது எப்படியாக இருக்கும் என்று'', நீங்கள் சரியாக நினைவு கூறுவீர்கள் என்றேன். மேலும் அவர் அதை நினைவு கூர்ந்தார். நான் அவரை விட்டுகடந்து போனேன். அன்று இரவு எங்கள் கூடாரத்தில் வந்த போது பட் சொன்னார், 'சகோதரர் பிரன்ஹாம்..., அவர் என்னை அணைத்துக் கொண்டு பிறகு மேலும் கீழுமாக குதித்து உரக்க கத்தி அந்நியபாஷையில் பேசி, (அவர் ஒருகரடு முரடான கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தும்) தேவனை அவ்வாறு ஆராதித்தார். அவர், 'உங்களுக்கு தெரியுமா, சகோதரர் பிரன்ஹாம் என்னுடைய சகோதரருக்கு அந்த நேரம் முதல் ஒரு முறையும் கூட வலிப்பு வந்ததில்லை. ஒரு வருடமாக அவன் சரியாக இருக்கிறான்“, என்றார். 'அவன் அதை விசுவாசிக்கும் வரை அவன் தொடர்ந்து அப்படியே இருப்பான்“, என்று நான் சொன்னேன். மேலும் நான், 'அவனிடம் இயேசுகிறிஸ்துவுக்கு அவன் ஜீவியத்தை ஒப்படைக்கும்படியாக, மற்றும் அவனுடைய மீதமுள்ள ஜீவிய காலம் எல்லாம் அவருக்கு ஊழியம் செய்யச் சொல்லுங்கள். 'போஇனி பாவம் செய்யாதே என்பதே‚ அல்லது ஒரு மோசமான காரியம் அவன் மேல் வரும்”, பாருங்கள்‚ 'அவனை இப்பொழுது அதைச் செய்ய சொல்லுங்கள்“ என்றேன். 51ஆகவே, 'எனக்கு இன்னொரு தரிசனம் இருந்தது' மற்றும் நான் அவரிடம் அந்த தரிசனத்தைச் சொன்னேன், 'இப்பொழுது என்னோடு சில வாலிபர்கள் இருந்தார்கள். நாங்கள் வேட்டையாடச் சென்றிருந்தோம். மற்றும் அவர்கள் இளம் வாலிபர்கள். மேலும் அதில் ஒருவர் பச்சைநிற கையில்லாத கம்பளிச் சட்டை அணிந்து இருந்தார்' என்றேன். அவர் சொன்னார், 'நல்லது சகோதரர் பிரன்ஹாம் என்னிடத்தில் பச்சை நிற கையில்லாத கம்பளிச் சட்டை இல்லை'. அவருடைய மகன் பிளைன் (பதினெட்டு வயதாகிறது). அவனுக்கும் பச்சை நிற கம்பளிச்சட்டை இல்லை. எடி பிஸ்கல் அவர் ஒரு சிறிய உடலமைப்பு உள்ளவர். அவர் நூற்றிபத்து பவுண்ட் எடையுள்ளவர். அவர், 'என்னிடத்திலும் இல்லை சகோதரர் பிரன்ஹாம்', என்றார். நான், ''நல்லது அந்த மிருகம்...'' என்றேன். அவர், ''அது எந்த வகையான மிருகமாக இருந்தது'', என்றார். நான், ''அது பார்ப்பதற்கு மானைப் போல் இருந்தது'', என்றேன். அவர், ''இந்த இடம் உயரமாக இருப்பதால் இங்கு மான்கள் இருக்காது'', என்றார். அவர், ''அது ஒருவகையான கலைமானாக இருக்கும்“, என்றார். நான், ''கலைமானுக்கு அடர்ந்த கொம்பு இருக்கும்“, என்றேன். அவர், ''அது சரியே'', என்றார். நான், ''இதற்கு கூர்முனை இருந்தது'', என்றேன். அவர், 'நல்லது சகோதரர் பிரன்ஹாம் நாம் ஒரு செம்மறியாடு இருக்கும் தேசத்திற்கு போகப் போகிறோம். மான் இருக்கும் தேசத்திற்கு அல்ல'', என்றார். நான், 'நல்லது ஒருவேளை அது வேறு ஒருவேட்டை பயணத்தில் இருக்கும். சகோதரர் ஆர்கன்பிரைட்... அது அலாஸ்கா அல்லது வேறு ஏதாவது இடமாக இருக்கும். ஏனெனில் அது ஒருமிகப் பெரிய பழுப்புநிற கரடியாக இருந்தது', என்றேன். அவர், 'எந்த வகையான பழுப்புநிறம் அது', என்றார். நான், 'வெள்ளி முனை கொண்டது'. எல்லாவற்றையும்விட அதுதான் மிக பிரசித்தி பெற்றது என்றேன். அவர், 'நான் ஒரு வழிகாட்டி, நான் இந்தகாட்டுப் பகுதியில் என் ஜீவியம் முழுவதும் இருந்திருக்கிறேன். நான் ஒருபோதும் ஒருவெள்ளி முனையைப் பார்த்ததில்லை. நான் வழக்கமாக இருக்கும்; பழுப்புநிற கரடியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வெள்ளிமுனை பார்த்ததில்லை. என் ஜீவியத்தில் ஒருபோதும் பார்த்ததில்லை என்றார். 'நல்லது எங்கேயோ இருக்கிறது. மற்றும் நான் அதை கைப்பற்றுவேன்' என்று நான் சொன்னேன். அவர், 'அது சத்தியம் என்று நான் சொல்லுவேன். நான் அப்படியாகச் சொல்லுவேன்'' என்றார். 52நாங்கள் மூன்று நாள் கழித்து புறப்பட்டோம். எங்கள் கூடாரத்தை மரங்களின் மேலாகக் கட்டினோம். மற்றும் தேவன் எனக்கு உதவி செய்வாராக. இவைகள் இப்படியாக ஆயிரம் வருட அரசாட்சி வரை இருக்குமானால், நான் ஆயிரம் வருட அரசாட்சியில் இங்கு ஜீவிக்கட்டும். இயற்கையில் மூழ்கி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படியாக அவர்கள் அந்த பெரிய மலையின் மேலாக அவர் பிரதிபலிப்பதை பார்ப்பதற்கு, ஓ, தேவனே இதனை ஒருவரும் காணவில்லை என்றால் அவர்கள் குருடர்கள், செவிடர்கள், காதுகேளாதவர்கள். ஓ, என்னே‚ ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது, அங்கு மேலே அப்படியாக எங்களுக்கு ஒரு மகத்தான நேரமாய் இருந்தது. 53ஆகவே நாங்கள் ஒருமலையின் மேலாக ஏறினோம். அதன்மேல் போவதற்கு நீங்கள் அப்படியாக அதன் மேலாக நேராகவே நடந்து செல்லலாம். ஓ, அங்கு மரங்கள் இல்லை. எங்கு பார்த்தாலும் வெறும் காரிபோ புதர்கள். நாங்கள் அப்படியாக முப்பது அல்லது நாற்பது செம்மறி ஆடுகளைப் பார்த்தோம். அவைகள் எங்கள் வேட்டைக்குரியவாறு பெரியதாக இல்லை. எல்லாம் சிறியதாக மற்றும் அரைபாகம் முக்கால் பாகம் அளவே இருந்தது. எனக்கு அங்கு இருந்து ஒரு பெரியதாய் ஒன்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று இருந்தேன். ஆகவே நான் கீழே சென்றேன். மறுநாள் நாங்கள் அங்கே கடந்து சென்றோம். மற்றும் எடி பெரிய கால் அணிகளைப் போட்டுக் கொண்டு அங்கே தாவமுயன்ற போது தண்ணீரில் விழுந்துவிட்டார். மலையடி வாரம் வழியாக மேலே சென்று கொண்டிருந்தபோது, பட் நின்று, 'உங்கள் கண்ணாடியைக் கொடுங்கள் பில்லி'', என்றார். நான் அவரிடம் கண்ணாடியைக் கொடுத்தேன். நாங்கள் கொஞ்சதூரம் நடப்போம். பிறகு தேவனைக் குறித்து பேசுவோம். மற்றும் அப்படியாக மலையடி வாரத்தில் ஓடுவோம். உரக்க கத்துவோம். ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டிருப்போம். வேட்டைக்கு சகோதரர்களோடு போவோமானால் அருமையானதாக இருக்கும். 54ஆகவே அவர் என் கண்ணாடியை எடுத்துக்கொண்டு, அவர் சொன்னார், 'சகோதரர் பிரன்ஹாம் அதோ உங்களுடைய பழமையான ஆட்டுக்கடா. அவைகள் ஒரு எட்டு இருக்கிறது, ஒரு ஆறு மைல்; தூரத்தில் அவைகள் வேறு ஒரு மலை உச்சியில் இருக்கிறது. அவைகள் பாருங்கள்‚ எல்லாம் ஒன்றாக‚ பாருங்கள்‚ நான் அதை எடுத்துக்கொண்டு, 'அவைகள் அப்படியே கட்சிதமாக இருக்கிறது'', என்று சொன்னேன். அவர், 'நல்லது, நாம் இப்பொழுது கீழே இறங்கி, விடியற்காலையில் மூன்று மணி அளவுக்கு புறப்படுவோம்“, என்றார். மேலும், 'நாம் அங்கே ஒரு ஒன்பது அல்லது பத்து மணிஅளவில் அங்கு இருக்க வேண்டும். அப்பொழுது வயதான ஆட்டுக்கடாகள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் அது தான் சரியான நேரம்”, என்றார். நான், 'அங்கே நடந்துகொண்டு இருக்கும் அவைகள் என்ன?“, என்றேன். அவர் 'அது கலைமான்கள்“, என்றார். நான், 'ஆறு மைல்தூரத்தில் இருக்கும். அவைகளை எப்படி இருக்கும் என்று சொல்வது கடினம்'', என்றேன். 55ஆகவே அதன் பிறகு அறுநூறு மைல் தொலைவில் காக்கைகள் போகும் திசையில் ஒரு வழியோ அல்லது பாதையோ இல்லை. அப்படியாக நாம் வடக்கு கரையோரம் என்னூறு மைல் தூரம் போவோம் என்றால் வான்கூவர் போவோம். அங்கு சிறிதளவு கூட மக்கள் குடியிருப்பு எதுவுமே இல்லை, மேலும் இந்த வழியாகப் போவோமென்றால் அடுத்த மக்கள் குடியிருப்பு அன்கரேஜ்;. அது எழுநூறு அல்லது என்னூறு மைல் தொலைவில் உள்ளது பின் திசையில் போவோம் என்றால், எல்லோநைப் என்ற ஒரு சிறிய பட்டணம் உள்ளது. இந்த இடத்தில் கப்பல் வருடத்துக்கு ஒரு முறை எஸ்கிமோக்களுக்காக வருகிறது. அதற்கு அடுத்து ரஷ்யா இருக்கிறது. ஆகவே நாங்கள் அந்த இடத்தில் தனியாகவே இருக்கலாம். நாம் கொடுக்கும் உபத்திரவங்களிலும் மற்றும் சோதனைகளிலும் இருந்து அங்கே தான் தேவன் இளைப்பாறுவார். ஆகவே அவர் இளைப்பாறிக்கொண்டிருக்கும் போது நான் அவரிடம் சென்று பேச எனக்கு மிகவும் பிடிக்கும். பாருங்கள், கப்பலில் இருந்தது போல்... அது கடைசி இரவு. 56ஆகவே நாங்கள் கீழே சென்றோம். மறுநாள் காலை முன்னதாகவே புறப்பட்டோம். அந்த குன்றின் உச்சிக்குப் போகும் வரை சுமார் எட்டு மணி அளவில் ஷிண்டாங்கிளையும் மற்ற எல்லாவற்றையும் சுற்றி வந்தோம்.(ஷிண்டாங்கிள் என்ற வார்த்தை ஒலுபுதரை விவரிக்க உள்ர் வடக்குப்பகுதியில் உபயோகிப்பார்கள். ஒரு புதரை விவரிக்க. அது ரொம்ப திடமாக அடர்த்தியாக மற்றும் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் வளரும். ஒரு சிறிதளவு பிரயாணம் இதன் ஊடாகபோகும் போது ஒருவருக்கு சீக்கிரமே இதன் அர்த்தம் என்ன என்று புரிந்துவிடும், ஏனெனில் ஒருவர் அவர்களுடைய தோள்களையும் பாதங்களையும் இந்த புதர் கெட்டியாக பிடித்திருக்கும், இதற்கு சிறந்த விமர்சனம் என்னவென்றால் அடர்ந்த தாழ்வான படர்ந்தபுதர்) மேலும் மேலே செல்லும் வழியில் வயதான ஒரு பெண்மான் சென்றது. மற்றும் ஒரு நல்லதடியான ஆண் மான் மலைமேலாக ஏறிக் கொண்டிருந்தது, அதற்குப் பெரிய கொம்புகள் இருந்தது. மேலும் சொன்னேன், 'நல்லது இதோ இந்த காட்டு பகுதியில் நான் பார்த்த முதல் மான் இதுவே‚ இவ்வளவு உயரத்தில் இருந்ததில்லை“, என்றேன். அவர், 'ஆம், அதுகலைமான்“, என்றார். ஆகவே நாங்கள் அந்தமலை மேலாகச் சென்று பார்த்தோம். அந்த செம்மறியாடுகள் அங்கு இல்லை. ஆகையால் பட் மற்றும் நானும் சுற்றிநடந்து கொண்டிருந்தோம். எடி அவர் அப்படியாக வேறு வழியாக நழுவிச் சென்றார். பிளைன் (அவர் மகன்) ஏதாவது பறவை கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தோம். ஓ, என்னே‚ 'தேவனுக்கு மகிமை“ என்று உரக்க கத்தினேன். நான் கீழே பார்த்தேன். அங்கே கூர்மையான பெரிய பனி மலைகள், அதன் கீழாக மஞ்சள் நிற அடர்ந்த பாசைசெடிகள், அதற்கும் கீழாக பசுமை மாறாத ஊசி இலை மரவகைகள், அதன் கீழாக பார்க்கும்போது சிகப்பு நிற புதர்கள், அதற்கும் கீழாக மஞ்சள் நிறகாட்டு அரச மரம். இவையெல்லாம் கீழே இருக்கும் ஏரியின் மேல் பிரதிபலிக்கிறது. ஓ என்னே‚. 57பட் மற்றும் நானும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு சுற்றி நடனம் ஆடினோம். உரக்கக் கத்தி தேவனை ஆராதித்தோம். மற்றும் நாங்கள் அப்படியாக ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அமர்ந்து சுமார் இரண்டு மணிநேர அளவில் தேவனைத் துதித்து ஒரு அருமையான நேரத்தைப் பெற்றோம். நான், 'எடி எங்கே போயிருக்கிறார் என்று தெரியவில்லை'', என்றேன். நாங்கள் அவரை 'டுயூட்'' என்று அழைத்தோம். ஆகவே நாங்கள் கீழே சென்று மலைக்கு குறுக்கே சென்றோம். 'அவரால் இங்கே தொலைந்துபோயிருக்க முடியாது'', என்று நான் சொன்னேன். 'இல்லை, பிளைன் அங்கே எங்கோ இருக்கிறான்; அவன் ஒரு இந்தியன்'', என்று அவர் சொன்னார். ஆகையால் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். நான் அவருடைய கேமரா அங்கே இருப்பதைப் பார்த்தேன். 'அது எடியுடையது“, என்று நான் சொன்னேன். அப்படியாக மலையின் கீழாகப் பார்த்து இந்த வழியாகப் போனேன் பட் அவர் வேறு வழியாகச் சென்றார், என்றேன். எடி 'இஷ் இஷ்“ என்று மெதுவாக அழைத்தார். அவர் அந்த ஆண்கலைமானை வேட்டையாடிக் கொண்டிருந்தார். மற்றும் அவர் அதை எடுத்துக் கொண்டு அவர் ஊழியம் செய்கின்ற அந்த இந்திய நண்பர்களுக்கு கொடுக்கப்போகிறார். ஆகவே அவர் அந்த கலைமானைச் சுட்டார். அதை சுத்தப்படுத்தச் சென்றோம். 58ஒரு மணியளவில் நாங்கள் திரும்பி வந்தபோது எங்கள் சேணம் பூட்டப்பட்ட குதிரைகள் நாங்கள் விட்ட இடத்தைவிட்டு அரை மைல் தொலைவில் இருந்தது. நாங்கள் இங்கே நின்றுகொண்டிருந்தோம். சகோதரர் பிரன்ஹாம், 'உங்களுக்கு நடப்பதற்கு பிடிக்குமா“, என்று கேட்டார். நான், 'நிச்சயமாக“, என்றேன். 'நாம் இந்த மலையை அலசிப் பார்ப்போம். ஒரு வேளை அந்த ஆட்டுக்கடாக்கள் வேறு ஒரு துளை வழியாகச் சென்றிருக்கக் கூடும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு வழியாக அவைகள் சென்றிருக்கும். எடி மற்றும் மற்றவர்களும் குறுக்கு வழியில் சென்று கீழேபோகட்டும் மற்றும் அவர்கள் உங்களுடையகுதிரையை மற்றும் என்னுடைய குதிரையை எடுத்து கொண்டு அந்த கலைமானையும் எடுத்துக்கொண்டு கூடாரத்துக்குச் செல்லட்டும். நாம் இதனூடாக நடந்துசென்று அந்த இடத்தை அடைவோம். நாம் அப்படியாக இன்று இரவு பத்து அல்லது பதினொரு மணி அளவில் நாம் அங்கு சேரலாம்“, என்றார். நான், 'நல்லது, நாம் அப்படியாகவே செய்யலாம்'', என்றேன். 59ஆகவே நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தகர குவளை நிறைய காலாமீன்கள் சாப்பிட்டோம். அவைகளை நாங்கள் அந்த பாசை செடியில் புதைத்து வைத்திருந்தோம். ரொட்டிகளை எங்கள் சட்டைக்குள் வைத்துக்கொண்டிருந்தோம். அது எங்கள் வேர்வையில் நனைந்து அதை ஒரு உருண்டை கட்டியாக்கியது. ஆனாலும் அது சுவையாக இருந்தது. உங்களுக்கு பசியிருக்கும் போது அது பரவாயில்லை. ஆகவே அங்கே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மேலும் நான் அப்படியாக சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தேன். மற்றும் நான் என்னுடைய கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான் சொன்னேன், 'பட் அங்கே பாருங்கள் அங்கே இருப்பது என்ன?“. ஒரு மூன்றுமைல் தொலைவில் அங்கே அந்த கலைமான் இருக்கிறது. அது வினோதமாக இருந்தது. அதற்கு படர்ந்த கொம்புகள் இல்லை; அதற்கு நீண்ட கூர் முனைகள் இருந்தது. 'அதோ அங்கே கச்சிதமான அந்த அழகான காட்சி மற்றும்அந்த மிருகம் அப்படியாக அதேவிதத்தில் நின்று இருக்கிறது”, என்றேன். மேலும் நான், 'ஒரு காரியம்மட்டும் இந்த தரிசனத்துக்குத் தடையாக இருக்கிறது, அது பச்சை நிறக்கட்டம் போட்ட சட்டை அணிந்த ஒருவர்'',என்றேன். மற்றும் அங்கே எடி பச்சை நிறக்கட்டம் போட்ட சட்டை அணிந்து நின்று கொண்டிருந்தார். நான், 'உங்களிடம் இல்லை என்று நான் நினைத்தேன்“, என்றேன். 60அவர் 'என் மனைவி என்னுடைய பயண மூட்டையில் வைத்து இருக்கக் கூடும். நான் நேற்றைய தினம் தண்ணீரில் விழுந்த போது“, சட்டையை மாற்ற வேண்டியதாக இருந்தது என்றார். அவர், 'அவள் அதில் வைத்தது எனக்கு தெரியாது. சகோதரர் பிரன்ஹாம், நான் உங்களிடத்தில் தவறாக சொன்னதற்கு என்னை மன்னியுங்கள்”, என்றார். 'அப்படியாக நீ செய்ய வேண்டியதாக இருந்தது மகனே'', என்று நான் சொன்னேன். 'நீங்கள் இங்கு நின்று கொண்டு மூன்று மைல் தொலைவில் சுட முடியும் அல்லவா, சகோதரர் பிரன்ஹாம்“, என்று பட் உரக்க கத்தினார். 'தரிசனத்தில் நான் அதற்கு ரொம்ப நெருங்கி இருந்தேன்“, என்று நான் சொன்னேன். 'சகோதரர் பிரன்ஹாம், அங்கே எப்படிச் செல்லப் போகிறீர்கள்“, என்று அவர் சொன்னார். 'எனக்குத் தெரியாது ஆனால் நான் அங்கு செல்வேன்“, என்று நான் சொன்னேன். மேலும், ''எப்படிப் போவீர்கள்'', என்று அவர் கேட்டார். ''இந்த அழகான இயற்கையின் குறுக்காக'', என்று நான் சொன்னேன். 'அது ஆபத்தானது நீங்கள் அங்கே வழுக்கி விழுந்தால் ஒரு நொடியில் ஆயிரக்கணக்கான டன் பனி உங்கள் மீது இருக்கும்“, என்று அவர் சொன்னார். 'கர்த்தர் அதைப் பார்த்துக் கொள்வார். அந்த வழியாகத்தான் நான் தரிசனத்தில் சென்றேன்“ என்று நான் சொன்னேன். 'நல்லது நான் உங்களைப் பின் தொடர்வேன்'', என்று அவர் சொன்னார். அப்படியாகவும் வந்தார். 61மேலும், ''நீங்கள் அந்த கலைமானை எடுத்துக்கொள்ளும் வரை நாங்கள் இங்கேயே தரிக்கிறோம்“ என்று இந்த வாலிபர்கள் சொன்னார்கள். 'பிறகு நாங்கள் குதிரைகளை எடுத்துக்கொண்டு செல்வோம். நாங்கள் உங்களை நான்கு அல்லது ஐந்து மைல் உள்ள அந்த மூட்டில் கடைசியாக இருக்கும் இடத்தில் சந்திக்கின்றோம்”, என்று சொன்னார்கள். அவர், 'சரி'', என்றார். ஆகவே நானும் மற்றும் பட்டும் புறப்பட்டோம். அரை மணிநேரத்தில் நாங்கள் அந்த இடத்திற்கு போக வழி வகுத்தோம். மேலும் நாங்கள் வரும் திசையைப் பார்த்தபடி அந்த கலைமான் அப்படியே அங்கே இருந்தது. ஆனால் எங்களை அது கவனிக்கவில்லை. அது ஒருவேளை தூங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். நாங்கள் ஒரு சிறுகுறுக்கு வழியில் ஏறி அதற்குச் சரியாக ஒரு முப்பது கெஜ தூரத்தில் வந்தோம். அந்த மிகப் பெரிய மிருகம் அங்கே இருந்தது, நான் எழும்பி அதைச் சுட்டேன். 62நாங்கள் அங்கே அதை உட்கார்ந்து பக்குவப்படுத்திக் கொண்டிருந்த போது, 'நீங்கள் இதன் கொம்பு நாற்பத்தி இரண்டு அங்குலம் என்று சொன்னீர்கள் அல்லவா“, என்று பட் சொன்னார். ''அது சரியே'', என்று நான் சொன்னேன். அவர், 'சகோதரர் பிரன்ஹாம் அவைகள் நூற்றிநாற்பத்தி இரண்டு போல் இருக்கிறது. பெரிய தலை அதற்கு“, என்று சொன்னார். 'இல்லை சரியாக நாற்பத்திஇரண்டு“ என்று நான் சொன்னேன். 'என்னிடம் அளவு நாடா உள்ளது', என்று அவர் சொன்னார். 'நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?', என்று நான் கேட்டேன். அவர், 'இல்லை ஐயா“ என்றார். மேலும், 'ஒரு நிமிடம் பொறுங்கள். பழுப்புநிற கரடி வேட்டையாடுவீர்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்”, என்றார். நாம் திரும்பப் போகும் முன் அது வெள்ளி முனைக்கொண்டது என்றும், 'நீங்கள் அந்த இடத்திற்கு போகும் முன் பச்சை நிறசட்டை அணிந்த அந்த வாலிபன்; இருப்பான்'' என்றும் சொன்னீர்கள். ''அது உண்மையே'', என்று நான் சொன்னேன். (பட்) அவர் அந்த மலைப்பகுதியில் கீழே பார்த்தார், 'நல்லது, இங்கே எதுவும் உயரமாக இல்லை. எல்லாம் பாசைச் செடி; மலையின் மேலாக மைல் கணக்கில். எல்லாம் பாசை செடி நிறைந்த மலை. அது எங்கே இருக்கிறது சகோதரர் பிரன்ஹாம்?'', என்றார். 'அவரால் எனக்கு ஒன்றைக் கொடுக்க முடியும். அவர் சொன்னார்'', என்று நான் சொன்னேன். 'அதை அவிசுவாசிக்கிறீர்களா பட்?'', என்றேன். 'இல்லை ஐயா'', என்று அவர் சொன்னார். நல்லது நாங்கள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் நேரம் துப்பாக்கியைச் சுமந்தார். நான் கொஞ்ச நேரம் அதன் தலையைச் சுமந்தேன். அப்படியே ஒருவருக்கொருவர் அதை மாற்றிக் கொண்டும் தூக்கிக் கொண்டும் வந்தோம். ஒருவருக்கொருவர் பக்கத்தில் நடந்து வந்தோம். அந்த பெரிய கொம்புகள் பாசையில் கிளறிக் கொண்டேயிருந்தது. நாங்கள் ஒரு மைல் தூரத்தில் இருந்தபோது நாங்கள் நின்று சுற்றிப் பார்த்தோம். அவர், 'அந்த கரடி இப்போது வெளியே வருவது நலமாயிருக்கும் அல்லவா“ என்றார். நான், 'எது உங்களை தொல்லைப்படுத்துகிறது'', என்றேன். ''ஒன்றுமில்லை'', என்று அவர் சொன்னார். 63ஒரு பனிப்பாறை அருகே வரும் வரை நாங்கள் அப்படியாக நடந்து கொண்டுபோனோம். அங்கே உட்கார்ந்து சிறுது நேரம் குளிர்காய்ந்தோம். அவர், 'சகோதரர் பிரன்ஹாம் யோசித்துப் பாருங்கள், நமக்கு இப்பொழுது அந்த வாலிபர்களை நாம் சந்திக்கச் சொன்ன இடத்திற்கு அரை மைல் தூரம் கூட இல்லை. மேலும் நீங்கள் இந்த இரண்டு இடைவெளியில் இருக்கும் தூரத்தில் நீங்கள் ஒரு வெள்ளிமுனை கொண்ட கரடியை கொல்லப்போவதாகச் சொன்னீர்'' என்றார். நான், 'அது சரியே. அது சரியே. ''அதை சந்தேகிக்கிறீர்களா பட்'', என்றேன். 64அவர் எழுந்து என் கையை எடுத்து, 'சகோதரர் பிரன்ஹாம்“ என் சகோதரர் அந்த நாளிருந்து இந்நாள்வரையும் அவனுக்கு வலிப்பு வந்தது இல்லை. அந்த தேவன் என் சகோதரர் குறித்து சொல்லும் போது, உங்களிடம் அவர் பொய் சொல்லமாட்டார்”, என்றார். 'பட் அது அங்கு இருக்கும்'', என்று நான் சொன்னேன். ''எங்கு இருந்து வரும் அது'', என்றார். 'எனக்குத் தெரியாது'' என்று நான் சொன்னேன். ஆனால் நான் சொன்னேன், பட் எனக்கு ஐம்பத்திஇரண்டு வயதாகிறது. நான் சிறு வயதில் இருந்து தரிசனங்களைக் காணுகிறேன். மேலும் நான் இந்த கொல்லப்பட்ட கலைமானைப் பார்த்த போது……... அதனுடைய கொம்புகள் நாற்பத்தி இரண்டு அங்குலமாக இருக்கிறதா என்று நீங்கள் பார்ப்பீர்கள். மற்றும் அதே தரிசனத்தில் நான் திரும்ப நான் வேட்டைக்கு வந்த மக்களோடே போய் சேரும் முன் அந்த வழியில் இந்த வெள்ளிமுனை பழுப்பு நிறக் கரடியை நான் கொல்லுவேன்'', என்றேன். அவர், சகோதரர் பிரன்ஹாம்,' என்னால் இருபது மைல் தூரம் வரை பார்க்க முடிகிறது. தேவன் தரையில் இருந்து அதை வெளியே கொண்டு வரவேண்டும். அல்லது வானத்தில் இருந்துக் கொண்டுவர வேண்டும் அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டும்'', என்றார். நான், ''கவலைப்படாதீர்கள் அது அங்கு இருக்கும்'', என்றேன். 65நாங்கள் இன்னும் ஒருநூறு கெஜ தூரத்திற்கு நடந்தோம். அவரும் ரொம்ப களைத்துப் போய் இருந்தார். இது எங்களுடைய பரிசுப்பொருள், ஒரு நூற்றி ஐம்பது பவுண்ட் இருக்கும். ஆகவே மலையில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தோம். அதை கீழே வைத்து, 'அம்மாடி என்னால் இதற்குமேல் முடியவில்லை“ என்று சொன்னார். நான் சொன்னேன், ''ஆம்'' நாங்கள் அப்பொழுது அந்த உயரத்தில் இருந்து அந்த ஊசி இலை மரவகைகள் கிட்டே வந்தோம். ஒருவகையான காடையைப் போன்ற பறவை மற்றும், பனிப்பகுதி கோழிகள் இருந்தன. நான் அதன் மேல் கற்களை வீசிக்கொண்டு இருந்தேன். அவர், 'நீங்கள் இந்த பனிப்பகுதி கோழிகளை சாப்பிட்டு இருக்கிறீர்களா?“, என்றார். அதற்கு நான், 'இல்லை, அப்படியாக இல்லை“, என்றேன். அவர், 'அவைகள் அந்த காடை போன்ற பறவைபோல் நன்றாகவே இருக்கும்'', என்றார். அவர், 'சகோதரர் பிரன்ஹாம், அவருடைய பெரிய பழைய கருப்புதொப்பியை காற்றுக்காக வீசியவாறே சொன்னார். பையனே, அந்த வயதான கரடி வெளியே வருவதற்கு நேரம் ஆயிற்று அல்லவா'', என்றார். அதற்கு நான், 'பட் நீங்கள் அதை சந்தேகப்படுகிறீர்கள்“, என்றேன். அவர், 'இல்லை நான் சந்தேகப்படவில்லை. ஆனால் சகோதரர் பிரன்ஹாமே, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை“, என்றார். நான், 'என்னாலும்; கூடத்தான். அது நான் புரிந்துகொள்வதற்காக அல்ல. அது நான் விசுவாசிப்பதற்காகவே. ஆமென். பரத்தில் இருக்கும் தேவனுக்கு இவைகள் எல்லாம் உண்மை என்று தெரியும். இவைகள் உண்மை இல்லையென்றால் இங்கு நின்று கொண்டு இதை உங்களுக்கு நான் சொல்வேனா?“ என்றேன். 66பிறகு நான் துப்பாக்கியை அவரிடம் கொடுப்பதற்காகவும் மற்றும் அதன் தலையை எடுப்பதற்காகவும் நான் திரும்பினேன், அப்பொழுது நான், 'பட் அந்த கண்ணாடி உங்கள் கழுத்தில் இருக்கிறதல்லவா? அங்கே மலையின் ஓரமாக நிற்பது என்ன?'' என்றேன். அப்படியாக கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அவர், 'ஓ,எனக்கு தயவு செய்யுங்கள், அதுவேறு யாருடைய பால் கொடுக்கும் பசுவாக இருக்குமானால்“ (மற்றும் அந்த பகுதியில் அப்பேர்பட்டவை இல்லை), என் ஜீவியத்தில் நான் பார்த்த மிகப் பெரியபழுப்பு நிறகரடியாக அது இருக்கிறது, மற்றும் எனக்கு உதவி செய்யுங்கள். அந்த மஞ்சள் நிற சூரிய வெளிச்சம் அதன் மீது படுவதைப் பாருங்கள். அது வெள்ளி முனையுள்ளது (Silver tip). அது எவ்வளவு தூரம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லுவீர்களா”, என்றார். நான், ''இரண்டு மைல்தொலைவில் இருக்கிறது'', என்று சொன்னேன். நாங்கள் மிகவும் களைப்பாக இருந்தோம், 'எதற்காக காத்திருக்கிறோம். நாம் போகலாம்“, என்றேன். அதற்கு அவர், 'அதை கைப்பற்றுவோம் என்று நீங்கள் நிச்சயமாக இருக்கிறீர்களா“, என்றார். நான், 'நிச்சயம், நான் அதை கைப்பற்றுவேன்“, என்றேன். அவர், 'நீங்கள் எந்த வகை துப்பாக்கியை உபயோகிக்கிறீர்கள்'', என்றார். அதற்கு நான், 'அதைக்குறித்து கவலைப்படாதீர்கள். அது ஒரு சிறிய துப்பாக்கி. அநேக வருஷங்களுக்கு முன் ஒரு சகோதரர் ஒரு விசை ஒரு கூட்டத்தில் கொடுத்தார்“, என்றேன்.நான் அவரிடம், 'சரி, என்னிடம் இருக்கப் போகிறது விலை குறைந்த 270ரக துப்பாக்கி”, என்றேன். 67நாங்கள் அதற்கு நெருங்கிப்போனோம். அதிகமாக நாங்கள் நெருங்க, நெருங்க பார்த்ததை விட அந்த கரடி மிகப் பெரியதாக இருந்தது. பாருங்கள்? ஓ, அது பார்ப்பதற்கு ஒரு மிகப் பெரிய வைக்கோல் கட்டுகள் அடுக்கப்பட்ட உயரத்தில் இருந்தது. அந்த பாசை செடியின்மேல் நின்று கொண்டிருப்பது. பெரிய மகத்தான மிருகம், தலை அவ்வாறு அகன்றதாக, அதன் தலை பெரிதாக, பெரிய பாதங்கள், மேலும் அது ஒரு வகையான நீல நிற பெர்ரிபழ மரத்தின் கிளைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பெரிய வகையான மிருகம். நாங்கள் அதற்கு ஒரு எண்ணூறு கெஜ தூரத்தில் வந்தோம். அவர், ''சகோதரர் பிரன்ஹாமே,' இதற்கு முன் நீங்கள் ஒருபெரிய கரடியை சுட்டிருக்கிறீர்களா'', என்றார். ''நான் அநேக கரடிகளை சுட்டிருக்கிறேன் பட். ஆனால், ஒருபோதும் வெள்ளி முனை உள்ளதை சுட்டதில்லை'', என்றேன். அவர் உங்களுக்குத் தெரியுமா, இருக்கிறதிலேயே வெள்ளிமுனைதான் அதிகமாகப் போராடும் என்றார். நான், ''ஆம் எனக்கு புரிகிறது'', என்றேன். அவர், ''அதற்கு எப்படி மரிப்பது என்று தெரியாது'', என்றார். அதற்கு நான், ''நல்லது'', என்றேன். அவர், ''எவ்வளவு தூரம்... அதைப் பெறுவதற்கு எவ்வளவு நெருங்கி அதன் கிட்டே போவீர்கள்?'', என்றார். 68இப்பொழுது இதைக் குறித்து அவரிடம் கேளுங்கள். அவருக்கு கடிதம் எழுதுங்கள். நான் அவருடைய விலாசத்தைத் தருகிறேன். 'எவரேனும் விருப்பப்பட்டால் எனக்கு அதைக் குறித்து எழுதட்டும் அந்த காரியங்களில் எதுவாக இருந்தாலும் நான் அவர்களுக்குச் சொல்லுவேன்'', என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆகவே நான், ''நல்லது'',என்றேன். அவர், ''இப்பொழுதா'', என்று கேட்டார். நான், 'இல்லை, இல்லை. நான் இதைவிட அதற்கு ரொம்ப நெருங்கி இருக்க வேண்டும் பட். ரொம்ப நெருங்கி மிக நெருக்கத்தில் இருக்கவேண்டும்'', என்றேன். அவர், 'நாம் மிக நெருக்கத்தில் இருக்கிறோம். நம்மை அது எந்நேரத்திலும் தாக்கும்“, என்றார். அதற்கு நான், 'எனக்குத் தெரியும்'', ஆனால், 'பட் அது பரவாயில்லை'', என்றேன். அவர், 'சகோதரர் பிரன்ஹாம், ஒரு கரடியை சுடும் போது அதன் பின் பக்கத்தில் சுடுங்கள். அதனால் எழுந்திருக்க முடியாதபடி அதன் பெலனை உடைக்கவேண்டும், ஏனென்றால் அது போராடும்'', என்றார். நான், 'அந்த தரிசனத்தின்படி நான் அதன் இருதயத்தில் சுடுகிறேன்'', என்றேன். அவர், 'அதைக் குறித்து நீங்கள் தவறாக யோசிக்கவில்லையே“, என்றார். நான் அதற்கு, 'இல்லை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது''. ஏனெனில் தரிசனத்தில் உங்கள் இரண்டு உணர்வுகளிலும் இருப்பீர்கள். நான் வேறு ஒரு இரவில் உங்களுக்கு விவரித்தது போல் நீங்கள் இரண்டிலும் இருப்பீர்கள். அதை உங்களால் மறக்கமுடியாது. பாருங்கள், அது தான் காரியம் என்றேன். 69ஆகவே நாங்கள் மேலே ஏறி ஒரு இருநூற்று ஐம்பது கெஜத்திற்கு வந்தோம். அந்த கடைசி அளவு புதரையும் கடந்தோம். பிறகு நான் சொன்னேன், 'இவ்வளவு தூரம்தான்“, 'அதனைப் பாருங்கள், அது எவ்வளவு அழகாக இருக்கிறது'', என்றேன். 'ஆம் அப்படியாகத் தான் நான் நினைக்கிறேன்'', என்றார். மேலும் நான், 'சரி பட் இப்பொழுது இங்கு இருந்து எழும்பும்போது அது இப்படி வரும்“, 'நீங்கள் அதை கவனியுங்கள்”, என்றேன். அதற்கு அவர், 'நான் கவனிக்கிறேன்“, என்றார். ஆகவே நான் ஒரு குண்டை துப்பாக்கியில் போட்டேன். நாங்கள் அந்த சிறிய புதர் கீழாக இருந்தோம். நான் அப்படியாக எழும்பின போது அது வந்தது. ஓ, என்னே‚ ஓ, என்னே‚.நான் நின்று அதைச் சுட்டேன், அது ஒரு பட்டானி சுடும் தோட்டா போல் இருந்தது. அதன் மேல் சுட்டது. பையனே, அது கொஞ்சம் கூட அதை தடை செய்யவில்லை. ஓ, என்னே‚, வேகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நான் அவ்வாறு பார்த்ததில்லை. அது ஒரு குதிரையை அல்லது ஒரு மானை அல்லது வேறு எதையாவது விட கரடிகள் வேகத்தில் மீறும். ஆனால் இது அவ்வாறு மலையின் கீழாக நேராக எங்களை நோக்கி வந்தது. அப்படியாக நான் இன்னொரு குண்டு துப்பாக்கியில் போடும் முன் என்னிடம் இருந்து முப்பது அல்லது நாற்பது கெஜம் தூரத்தில் அப்படியாக உருண்டு விழுந்தது. அது அப்படியாக கீழே விழுந்து இறந்தது. அதன் இருதயம், நுரை ஈரல் அதில் இருந்து வெளியே வந்தது. அது ஒரு நொஸ்லெர் குண்டு துப்பாக்கி உபயோகிப்பவர்களுக்கு தெரியும். ஆகவே அதன் உடம்பை அது வெடிக்க வைத்தது. மற்றும் அது விழுந்தது. பட் வெளிரிப் போய் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர், 'சகோதரர் பிரன்ஹாம் அது என் மடியில் விழக்கூடாது என்று எண்ணினேன்'', என்றார். நான், 'நானும் அப்படியே எண்ணினேன்'', என்றேன். ''வியூ என மூச்சுவிட்டார். 'நான் இது எல்லாம் முடிந்த பிறகு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், வாலிபனே அது மட்டும் தரிசனமாக இல்லாவிட்டால் மேலும் அது நடக்கபோவதற்கு முன்னதாகவே பார்க்காவிட்டால், நான் உங்களோடு இந்த அளவு நெருங்கிய தூரத்தில் அந்த கரடியிடம் வந்திருக்கமாட்டேன்'', என்றேன். 70மேலும் எங்களால், ஒருவராலும் அதை நகற்ற முடியவில்லை. அது ஒரு ஆயிரம் பௌண்ட்டுகளிலிருக்கும் பெரிய மிருகம். ஆகையால் எங்களால் தோலுரித்து அதை சுத்தப்படுத்த முடியவில்லை. நாங்கள் கீழே இறங்கத் தொடங்கினோம். மற்றும் அவர், 'சகோதரர் பிரன்ஹாம், நான் அந்த கொம்புகளை தூக்கினேன். அந்த கொம்புகள் மட்டும் நாற்பத்தி இரண்டு அங்குலம் இருக்குமானால் நான் வலிப்பு வந்தது போல் ஓடுவேன்'', என்றார். நான், 'அதை இப்பொழுதே பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது அந்த அளவு இருக்கும்'', என்றேன். அவர், 'நான் இதுபோன்ற ஒன்றை ஒருபோதும் கண்டதில்லை. நான் கனவு காண்பதைப் போல் இருக்கிறது'', என்றார். மேலும் நாங்கள் கீழே இறங்கிச் சென்ற போது நான் எட்டியிடம் சொன்னது, 'இப்பொழுது கவனியுங்கள், பிளைன் தான் கரங்களை வைப்பான்'' இப்பொழுது நினைவு கொள்ளுங்கள், ஒரு சிறிய கரம் அந்த கொம்பின் மேலாக இருந்தது''. சகோதரர் பிரெட் அப்படி இருக்கும் என்று உங்களுக்கு சொன்னேன் அல்லவா‚ ஆகவே நான், 'நீங்கள் கவனியுங்கள்“ என்று எட்டியிடம் சொன்னேன். பிறகு பட் சொன்னார், ''பொறுங்கள்'', அவர் குதிரையை அங்குகொண்டு வந்தார். எங்களிடம்; கரடி இருந்தது. அந்த குதிரை, அதை கிழிப்பதைப் போல் செய்தது. குதிரைகள் பழுப்பு நிறகரடி அல்லது கரடி வாசத்திற்கு எப்படி நடந்து கொள்ளும் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே நான் சேனைவைத்த குதிரையினிடம் சென்று அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன், அது அங்கே இருந்து ஓட முயற்சித்தது. 71மேலும் அவர் சென்று அளவு நாடாவைக் கொண்டு வந்தார். மற்றும் அவர் என்னைப் பார்த்துக் கொண்டுவந்து, 'இங்கே வா பிளைன்“, என்றார். (நான் எடியை கையில் குத்தினேன்), 'நாடாவை அதன் மேல் போடுங்கள்”, என்றார். நாற்பத்தி இரண்டு அங்குலம் சரியாக இருந்தது. இப்பொழுது கொம்புகள் காய்ந்த பின் இரண்டு அங்குலம் சுருங்கும். அந்த பெரிய கரடி என்னுடைய சிறு அறையில் இருக்கிறது. மற்றும் அந்த கொம்புகள் சுவற்றின்மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல்களை அதன் தோற்றத்தின் அமைப்பு போல் வடிவமைக்கும் நபர் எனக்கு அதைச் செய்து கொடுத்தார். அங்கே ஒரு அளவு நாடாவை வைத்திருக்கிறோம். நாற்பத்தி இரண்டு அங்குலம் கட்சிதமாக இருக்கிறது. 72இப்பொழுது தேவன் எதற்காக வேட்டையாடும் காரியத்தைக் குறித்து ஒரு மனிதனிடம் சொல்லுவார்? நான் திரும்பி வந்தபோது என் தாய் வியாதிபட்டு இருந்தார்கள். நான் அவரைப் பார்க்கப்போயிருந்தேன் அவர்கள், 'பில்லி...…… பாருங்கள், அவர் என்னை ஊக்குவித்துக்கொண்டு இருந்தார். என்னை ஏதோ ஒரு காரியத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தார். மேலும் நான், 'அம்மா கர்த்தர் உங்களை எப்பொழுதுமே சுகப்படுத்தியிருக்கிறார்“, என்றேன். அவர்கள், 'அப்பாவை பார்க்க நான் வீட்டுக்குப் போகிறேன்“, என்றார்கள். நான், 'ஓ, அப்படிச் சொல்லாதீர்கள்“, என்றேன். அவர்கள், 'ஆம் நான் போகிறேன்'', என்றார்கள். மற்றும் நான் அவர்களுக்குக்காக ஜெபித்தேன், சகோதரர் பிரெட் மற்றும் இதற்கு சாட்சியாய் இங்கு இருப்பவர்களுக்குத் தெரியும். அதன் பிறகு, அவர்களை மருத்துவமனையில் வைத்தார்கள். அவருக்கு என்ன பிரச்சனை என்று மருத்துவரால் கண்டு பிடிக்க முடியவில்லை, நான் அவருக்காக ஜெபிக்கப் போனேன். அவர்கள், 'மகனே நான் போகிறேன்“, என்றார்கள். மேலும் என் தாய் ஒரு பலமுள்ள ஸ்திரீயாக இருந்தார்கள். 73இரண்டு நாட்கள் சென்ற பிறகு ஒரு தினம் நான் அங்கு சென்றேன். அவர்கள் அங்கே நின்று பரத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். 'பில்லி நான் உன்னைப் பார்க்கிறேன், என்றார். நான், 'அது சரிதானே அம்மா நானும் உங்களை இங்கே பார்க்கிறேன்'', என்றேன். அவர்கள், 'நீ ரொம்ப வயதாகி இருக்கிறாய் பில்'' மேலும் சொன்னார், 'உன்னுடைய வெள்ளை முடி மற்றும் தாடியும் ஒன்றாக தொங்கிக் கொண்டு இருந்தது. உன்னுடைய கரங்கள் சிலுவையைத் தழுவிக் கொண்டிருக்க என்னிடத்தில் நீ கரத்தை நீட்டுகிறாய்'', என்றார்கள். அதன் பிறகு எனக்குப் புரிந்தது, இது முடிந்தது. இப்பொழுது இங்கு இருக்கும் சகோதரர்களுக்கு அது உண்மை என்று தெரியும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாய் இருந்தது. நான் பிரசிங்கித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு செய்தி வந்தது. என்னால் என்னுடைய அம்மா மரித்துக் கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. தேவன் எப்பொழுதும் என்னுடைய குடும்பத்தார் மரிப்பதற்கு முன் காண்பிப்பார். ஆனால் அம்மா அவர்களைக் குறித்து தேவன் என்னிடம் எதுவும் காண்பிக்கவில்லை. இதோ எனக்கு ஒருதகவல் வந்தது. மற்றும் நான் அப்பொழுது என் செய்தியைக் கொடுத்துக்கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் வந்து, உங்களுடைய அம்மாவிடம் உடனடியாக போங்கள், அவரை தொலைபேசியில் அழையுங்கள். அவர்கள் இந்த நிமிடம் மரித்துக்கொண்டிருக்கிறார்'', என்றார். நான், 'மரணம் அப்படியாக நிற்கட்டும், தேவனுடைய வார்த்தை அதை விட முக்கியமாக இருக்கிறது'', என்றேன். 74இதோ இங்கே அமர்ந்திருக்கும் சகோதரர் பார்டர்ஸ்..., நான் ஆராதனை முடிந்தவுடன் அம்மாவை பார்க்கச் சென்ற போது, போகும் வழியில் அங்கே சகோதரர் பார்டர்ஸ்ஸை சந்தித்தேன். அவர், 'நீங்கள் ஆறுஅடி உயரம் கூட இல்லை. ஆனால் நான் ஒரு பத்து அடியுள்ள மனிதனை பிரசங்க பீடத்தில் இந்த காலையில் கண்டேன்“, என்றார். நான், 'சகோதரர் பார்டர்ஸ், எல்லாவற்றையும் அம்மாவுக்கு தேவன் பார்த்துக்கொள்வார்; என்றேன். அதற்கு சில நாட்கள் கழித்து என்னை அந்த அறைக்கு அழைத்தார்கள். மற்றும் அவர்கள் நிஜமாகவே மரித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பிள்ளைகளும் அவர் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டிருந்தோம். நான், 'அம்மா நீங்கள் நிஜமாகவே போய்க் கொண்டிருக்கிறீர்களா'', என்றேன். அவர் ''ஆம்'', என்றார். அதன் அதன் பிறகு அவரால் பேச முடியவில்லை. நான் அம்மா, இயேசு உங்களுக்கு என்னவாக இருக்கிறார்?'', நான் நீண்ட நாட்களுக்கு முன் அவர் நாமத்தில் தண்ணீரில் ஞானஸ்நானம் அவருக்குக் கொடுத்ததை நினைவு கூறினேன். அப்பொழுது நான் கேட்டேன், 'இப்பொழுது சொல்லுங்கள் அவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார், என்றேன். அவர்கள்; ''என்னுடைய ஜீவனைக் காட்டிலும் மேலானவர்'', என்றார்கள். 75நான், 'அம்மா நீங்கள் அப்படியாக போவதனால், நான் உங்களுடைய மகன், ஒரு பிரசங்கி, தேவனை சந்திக்கப் போகும் என் தாயிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள் என்றேன். நீங்கள் பிடிக்க வேண்டும். நான் அவர் கரத்தை பற்றிக்கொண்டேயிருந்தேன். அவரால் பேச முடியவில்லை. அது பார்ப்பதற்கு அவர்கள் முகம் மரத்துப்போவதுபோல் இருந்தது. நான், 'உங்களால் பேசமுடியவில்லை அம்மா?“, என்றேன். அவரால் முடியவில்லை நான், 'கவனியுங்கள். உங்களுக்கு இப்பவும் இயேசு முதல் போலவே இருக்கிறாரா?”, என்றேன். அவர்கள் தலையை அசைக்க முடிந்தது. அதற்கு பிறகு அவர்களால் தலையை அசைக்க முடியாத நிலைக்குச் சென்றார். நான், 'அம்மா உங்களுக்கு இப்பொழுது இயேசு எல்லாவற்றுமாய் இருக்கிறாரா? உங்களிடத்தில் இன்னும் ஒரு நிமிடத்தில் அவர் வந்து கொண்டிருக்கிறார். எல்லாவற்றுமாக அவர் இருக்கிறாரா?'', என்றேன். அவரால் அசைய முடியவில்லை. நான், 'அம்மா உங்களிடத்தில் உங்கள் கண் இமைகள் சிமிட்டுவது என்கிற ஒரு காரியம் தான் இருக்கிறது. இப்பொழுது நான் உங்களுக்கு தண்ணீர் ஞானஸ்நானம் கொடுத்த போது இயேசு உங்களுக்கு எவ்வாறு இருந்தாரோ அதே மாதிரி இப்பவும் இருக்கிறார் என்றால் உங்களுடைய கண் இமையை வேகமாக சிமிட்டுங்கள்“, என்றேன். அவர் கண்ணை சிமிட்டினார், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மேலும் மெலிதான காற்று அறையில் வந்தது. பிறகு பரத்துக்கு அம்மா சென்றார். 76நான் வீட்டுக்குச் சென்றேன், பிறகு அடக்க வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் துணிகளை எடுத்தேன். எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் அதே காரியம் செய்ய வேண்டும். பிள்ளைகள் எல்லாம் ஒருவர் ஒரு இடத்திலும் இன்னொருவர் இன்னோரு இடத்திலும் அழுது கொண்டிருந்தார்கள். அம்மா தான் எங்களுக்கு அடைக்கலமாக இருந்தார். நாங்கள் இப்பொழுது அதேமாதிரி இருக்க முடியாது. டாக் மற்றும் அவனுடைய குடும்பம் இந்த பக்கத்தில், ஜெஸ்ஸி மற்றும் அவனுடைய குடும்பம் வேறு ஒருபக்கத்தில், நாங்கள் சமீபமாக தான் ஹோவர்ட்டை அடக்கம் செய்தோம். 'நாமெல்லாம் அவ்வளவு தான் போல் இருக்கு; இனிமேல் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கப்போவதில்லை'', நாம் தங்குவதற்கு, 'அம்மாதான் பொதுவாக இருந்தார்கள். நாம் இனிமேல் அதிகமாக ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டோம்'', என்றேன். 77அவருடைய வஸ்திரங்களை நாங்கள் எடுத்த பிறகு இரவு நேரமானதால் நான் என் வீட்டிற்கு சென்றேன். நான் வீட்டுக்குச் சென்ற போது, திருமதி. டொமிக்கோ, சிகாகோவில் இருந்துவரும் அவரை யாருக்காவது தெரியுமா?கூட்டங்களில் சந்தித்த ஒரு நல்ல சிநேகிதி. அவர்கள் எனக்கு ஒரு வேதாகமம் கொடுத்தார்கள். அது சிகப்பு மையால் கொண்ட எழுத்துக்கள் மற்றும் அது மூடுவதற்கு ஜிப் போட்டதாக இருந்தது. நான் செம்மறி ஆடும் மற்றும் புறாவைப் பற்றி பிரசிங்கித்த போது, எனக்கு இரண்டு புறா கொண்ட ஒரு எழுதுகோல் வைக்கும் பேனா நிலை கொடுத்தார்கள். என் சகோதரரில் ஒருவர், சகோதரர் நார்மன் எனக்கு ஒரு புறாவையும் மற்றும் ஒரு செம்மறி ஆடும் கொடுத்தார். சகோதரர் பார்டர்ஸ் எனக்கு ஒரு செம்மறி ஆடு கொடுத்தார். நான் அந்த வேதாகமத்தை எடுத்தேன். மேடா ஒரு மூலையில் அழுது கொண்டு இருந்தாள். 78நான் ஜமைக்காவில் என் மாமியாரை கண்டது பற்றி இங்கு இருக்கும் கிறிஸ்தவ வியாபார புருஷர்கள் அறிவீர்கள். அந்த மேசையில் ஜமைக்காவில் உட்கார்ந்து இருக்கும் போது, 'என்னுடைய குடும்பத்தாரில் யாரோ ஒருவர் பற்கள் இல்லாதவர்கள் மரிக்க போகிறார்கள்“ என்று நான் சொன்னேன். நான் அவர்கள் போவதைப் பார்த்தேன் சரியாக அந்த மேசையில் கண்டேன், டெமோஸ் ஷங்கரியன் மற்றும் எல்லோரும் அங்கு அமர்ந்து இருந்தார்கள். அதற்குச் சில மணி நேரம் கழித்து ஒரு விசை என்னுடைய மாமியார் மரிக்கிற தருவாயில் சென்றார்கள். பாருங்கள்? பற்கள் இல்லை. அதுசரியாக இருந்தது. மேலும் நான் சொன்னேன், 'நான் ஒரு வாலிப மனுஷனுடைய வாயிலிருந்து ரத்தம் கொப்பளிப்பதை பார்த்தேன். பிறகு நான் தொலைபேசியில் அழைத்து, 'பில்லியை அனுமதிக்காதீர்கள்''. இங்கு யாராவது ஒருவர் ஜமைக்கா கூட்டங்களில் இருந்தீர்களா? இது நடக்கும் சமயத்தில் ஜமைக்காவில் இருந்தீர்களா?. ஆம் அதோ இரண்டுபேர் இருக்கிறார்கள். ஆகவே நான் சொன்னேன், 'பில்லி நீ அங்கே செல்லாதே. நான் ஒரு வாலிபன் ரத்தம் கொப்பளிப்பதைப் பார்த்தேன்''. மற்றும் அது என்னுடைய மைத்துனனாக இருந்தது. அவனுடைய அம்மா இறந்தபோது அவனுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. அந்த சம்பவத்தால் அவன் ஒரு அதிர்ச்சிக்குள்ளாகச் சென்றான். 79அதன் பிறகு அந்தநாளில் இங்கு நான் நின்றுகொண்டிருந்த போது, நான் வேதாகமத்தை எடுத்தேன். 'பிதாவே எனக்குத் தெரியவில்லை, அவர் (அம்மா) போவதை நீங்கள் காண்பிக்காமல் இருந்தது ஒருவேளை உம்முடைய அன்பாக இருக்கலாம். ஆனால் தேவனே நான் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறேன். உங்களுடைய வார்த்தையிலிருந்து என்னை தேற்றுவதற்கு எனக்கு சில வார்த்தைகளைத் தாரும்“, என்றேன். நான் சொன்னேன். 'என்னைத் தேற்றுவதற்காக ஏதோவொன்றை நான் படிக்கட்டும்”. மற்றும் நான் வேதாகமத்தை தானாகத் திறக்கும்படி வைத்தேன் அதோ அங்கே சிகப்புமையினால் வார்த்தைகள் 'அவள் மரிக்கவில்லை ஆனால் உறங்குகிறாள்“, என்றிருந்தது. நான் என் அறைக்குச் சென்றேன், நாங்கள் உறங்கச் சென்றோம். 80மறுநாள் காலை எட்டுமணியளவில் எழும்பினோம். அவரை அடக்கம் பண்ணுவதற்காக நண்பகலில் ஆயத்தப்படுத்தப் போகிறார்கள். நாங்கள் எல்லாம் அவரைப் பார்ப்பதற்கு அங்கே செல்ல மேடா பிள்ளைகளின் காலை சிற்றுண்டிக்காகச் சென்றாள். மற்றும் குட்டி ஜோ அழுதுகொண்டு இருந்தான். பெக்கி ஒரு மூலையில், ''நான் பாட்டியை மறுபடியும் பார்ப்பேனா'', என்று இன்னுமாக அழுதுகொண்டு இருந்தாள். அதற்கு நான், 'ஆம், ஆம், நீ பார்ப்பாய். அவர்கள் மேலே செல்ல கடந்து போனார்கள்'', மேலும் நான், 'நாம் மறுபடியுமாக அவரைப் பார்ப்போம்'', என்றேன். அவர்கள் இந்த சிறுபிள்ளைகளை மிகவும் நேசித்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?. ஆகவே, ''நாங்கள் பாட்டியை இந்த மதியவேளையில் பார்ப்போமா?'', என்று அவர்கள் எல்லோரும் அழுதுகொண்டு இருந்தார்கள். நான் நீங்கள் அவர் ஜீவித்துக் கொண்டு இருந்த சரீரத்தைப் பார்க்கலாம். ஆனால் பாட்டி உங்களுடைய இன்னொரு பாட்டியோட இருக்க பரலோகத்திற்கு மேலே சென்றிருக்கிறார்கள்'' என்றேன். பரலோகத்திற்கு., ஆனால் என்னுடைய சின்ன மகன் ஜோவால் புரிந்து கொள்ளமுடியவில்லை, அவனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன், ''அதன் பிறகு பாட்டி இன்று இரவு கீழே வருவார்களா?'', என்றான். அதற்கு நான் சொன்னேன், 'இல்லை, இல்லை, அவர்கள் எப்ப திரும்ப வருவார்கள் என்று எனக்குத் தெரியாது. இயேசு எப்பொழுது வருவாரோ அப்பொழுது மறுபடியும் வருவார்கள்'', என்றேன். 81நான் அங்கே நின்றுகொண்டிருந்தேன். மற்றும் நான் திரும்பி என் அறைக்குச் சென்றேன். நான் அப்படியாக வந்தபோது (இதைக் குறித்து என்னிடம் விவரிக்கச் சொல்லாதீர்கள் இதை எந்த விதத்திலும் விவரிக்க முடியாது). இப்பொழுது இந்த கூட்டத்தைப் பார்ப்பதுபோல் நான் அங்கு நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கிறேன். மேலும் நான் பாடல் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தேன். நான் அவ்வாறு செய்ததேயில்லை. என்னால் சரியாகப் பாடவும் முடியாது. அப்படியாக அங்கே ஒரு பெரிய மகத்தான கூட்டமான மக்கள் இருந்தார்கள். இந்தப் பக்கமாக, அந்த அரங்கத்தைப் பார்ப்பதற்கு அது வெளிப்புறமாக இருந்தது. ஓ, அதை எப்படி சொல்லுவீர்கள் என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அது ஒரு குன்றைப் போலவும், ஒரு அரங்கைப் போலவும், அது நீண்டதாக இருந்தது, பின்னால் உட்காருபவர்கள் இப்படியாகப் பார்ப்பதற்கு வரிசைப்படுத்தப்பட்ட அந்த வரிசைகள் எல்லாம் உயர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் நடுவரிசையில் மூன்று வரிசைகள். நடுவில் காற்றில் வரிசைப்படுத்தப்பட்ட இருக்கைகள் போல் இருந்தது. வலிப்புள்ள சிறிய முடமான பிள்ளைகள் படுத்து இருந்தார்கள். 82மேலும் நான் ஒரு கருமையான சூட் (suit) அணிந்து இருந்தேன். மற்றும், 'அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்'' 'அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள். சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்'', என்று நான் பாடிக்கொண்டு இருந்தேன். நாங்கள் அப்படியாக சிலமுறை எங்கள் சபையில் பாடுவோம். அதுவும் பிள்ளைகள் பிரதிஷ்டை செய்யும் போது. பிரசித்திப் பெற்றவர்கள் உட்காருவதற்கு அங்கு ஒரு பெட்டிபோன்ற இருக்கை இருந்தது. அதுபிரசங்க பீடத்திற்கு அருகில் இருந்தது. ஆனால் பாடல்களை நடத்திக் கொண்டு நான் கீழே இருந்தேன், மற்றும் திடீரென எல்லாவற்றிலும், நான் இங்கு நின்றுகொண்டு இருந்து என்னையே பார்த்து கொண்டு இருப்பது, ஓ அது எப்படி என்று யோசிக்காதீர்கள். உங்களால் முடியாது. நான் இங்கு இருக்கும்போது அது இங்கு இருக்கும் சூழ்நிலை போன்று இருந்தது. எனக்குத் தெரியவில்லை. இரண்டு பேரும் ஒன்றாக செயல்பட்டனர். இரண்டு பேர் ஒன்றாகப்போவது நன்றாக இருக்கிறது. என்னிடம் ஒரு கேமரா இருந்தது. இறங்கிவரும்போது எனக்குப் புகைப்படம் எடுக்கத் தெரியவில்லை. நான் அதன் மூலமாகப் பார்த்தேன். எனக்கு ஐந்து அல்லது ஆறு பொருள்கள் தெரிந்தது. நான் போகஸ் (focus) செய்தேன். 'அதில் போகஸ் செலுத்தினீர்கள் என்றால் எல்லாம் ஒன்றாகத் தெரியும்“, என்று பில்லி என்னிடம் சொன்னான். நாம் வெவ்வேறு காரியங்களைப் பார்ப்போம். அதில் கவனம் வைக்கும்போது மேலும் தேவனுடைய வார்த்தையை உபயோகித்து அவர் மீது கவனம் செலுத்தினால் அதன் பிறகு நான் என்ன சொல்லுகிறேன் என்று புரியும். ஆனால் முதலாவதாக அதை உங்கள் கவனத்தில் வையுங்கள் பாருங்கள். அது நல்ல ஒரு யோசனையாக இருக்கிறது. 83ஆகவே அங்கு நின்றுகொண்டிருந்து பார்க்கையில் நான் தரிசனத்தில் சென்றேன். மற்றும் அதில் நான் ஒரு பிரசித்தி பெற்ற நபர் அந்த இடத்தின் பின் பக்கத்தில் வந்துகொண்டு இருந்ததை கவனித்தேன். மேலும் அவர்கள் அந்த பிரபலமானவர்கள் இருக்கைக்கு வந்து கொண்டு இருந்தார்கள். ஆகவே, அப்படியாக இந்த வழியாக வந்தார்கள் மற்றும், 'நல்லது அந்த சீமாட்டிவரும் வரை நான் மறுபடியும் ஒருமுறை பாடட்டும் என்று நான் நினைத்தேன். அவர்கள் பழைய பாணியிலான உடையை அணிந்திருந்தார்கள். இப்பொழுது இங்கு இருக்கும் சில சீமாட்டிகளுக்கு ஞபாகம் இருக்கும். பாவாடைகள் அப்படியாக கீழே வரைக்கும் கால் அணிகளில் கட்டியுள்ள நாடா வரைக்கும் மற்றும் நீளமாக (அதை என்ன சொல்லுவீர்கள். இங்கு இருக்கும் இந்த சீமாட்டி உடுத்திருப்பதுபோல் மேல் ஆடை (blouse) அதுபோல் ஒன்று) நீளமான சட்டைகை அது. நினைவு இருக்கிறதா மற்றும் கழுத்து முட்ட அந்த பொத்தானால் போடப்பட்டு மற்றும் பெரிய தொப்பி பக்கவாட்டமாக அணிந்து, மேலும் அந்த காலத்து சீமாட்டிகள் நீண்ட கூந்தல் வைத்து, அதை அப்படியாக மடித்து தொப்பியை அதன்மேல் வைத்து அதை கிளிப்பால் போடுவார்கள், தெரியுமா‚ ஏனென்றால் அவர்கள் குதிரையில் ஒருபக்கமாக சவாரி செய்வார்கள். 84ஆகவே இந்த சீமாட்டி மேலே வந்து கொண்டு இருந்தார்கள். மற்றும் எல்லோரும் அந்த சீமாட்டிக்கு மரியாதையை செலுத்தினார்கள். மற்றும், அவர்கள் அந்த பிரபலர்களுக்கு உண்டான பெட்டிக்குப் போவார்கள் என்று நான் நினைத்தேன். ஆகவே, 'இன்னொரு விசையாக எல்லோரும்“, எல்லா பக்கங்களிலும் உள்ளவர்களை, 'அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டுவாருங்கள்'' இப்பொழுது இங்கே 'அவர்களை உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்” (அதன் பிறகு நடுவில் மற்றும் எல்லோரும்) 'சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்'', என்று பாடும்படி சொன்னேன். நான் அதை சொல்லிக்கொண்டு இருக்கையில் அந்த சீமாட்டி பெட்டி இருக்கும் இடத்தில் சேர்கிறார்கள். அவர் அந்த பெட்டி இடத்தில் போகும் போது எல்லோரும் எழுந்து நின்றார்கள். மற்றும் அவரை இனம்கண்டு கொண்டதுபோல இப்படியாகச் செய்தார்கள். அவரும் அவர்களை இனம்கண்டு கொண்டார். நல்லது எனக்கு பிரசிங்கிப்பதற்கு நேரமாயிற்று என்று நான் நினைத்தேன். மற்றும் நான் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கச் செல்லவேண்டும். நான் அந்த பிரசங்க பீடத்திற்கு இப்படியாகச் சென்றேன். அந்த பெட்டி அது மிகவும் நெருங்கி இருந்தது. தொலைவில் இந்த சகோதரர்கள் உட்கார்ந்திருக்கும் பக்கம் நான் திரும்பினேன். 85'அந்த சீமாட்டி என்னிடம் வந்து வணங்கும் போது, அப்பொழுது அவர்கள் யார் என்று நான் இனம் கண்டு கொள்ளுவேன்'', என்று நான் யோசித்தேன். ஆகவே நான் என் தலையை திருப்பிப் பார்த்தபோது அந்த சீமாட்டி ஏற்கனவே தலையை தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். இப்படியாக மற்றும் என் தலையை கீழே இப்படியாக தாழ்த்தினேன். மற்றும் ஒரே நேரத்தில் நான் தலையை உயர்த்தி அவர்களை சந்தித்தபோது. அது அம்மா, இளமையாக அழகாக இருந்தார்கள். நான் அவரைப் பார்த்து, 'அம்மா'', என்றேன். அவர்கள், ''பில்லி'', என்றார்கள். அதன் பிறகு மின்னல் அந்த கட்டிடம் முழுவதும் பிரகாசித்தது. இடி முழங்கியது; நடுக்கம் வந்தது. மற்றும் ஒரு சத்தம், 'உன்னுடைய அம்மாவைக் குறித்து பயப்படாதே அவர்கள் 1906-ல் எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள்'', என்றது. மேலும் நான், '1906 என்ன அது''?, என்றேன். அதற்கு மேடா, என்னுடைய மனைவி, ''உங்களுக்கு என்ன ஆயிற்று'', என்றாள். நான், 'தேனே, 1906? என்ன அது?“, என்றேன். ''ஏன்'', என்று அவள் கேட்டாள். நான், 'தரிசனம், நான் அம்மா இங்கு சரியாக நிற்பதைப் பார்த்தேன்'', என்றேன். அவள் அதற்கு நீங்கள், ''என்ன பார்த்தீர்கள்“, என்றாள். நான், 'அம்மாவைப் பார்த்தேன்“,என்றேன். அவள், 'நிச்சயமாகவா பில்'',என்றாள். 86நான், 'அவர்கள் இங்கே நின்று கொண்டிருந்தார்கள். மற்றும் அழகாக இருந்தார்கள் என்றேன். மேலும், 'அவர்கள் வாலிபமாக இருந்தார்கள்'', என்றேன். ஆகவே நான் அந்த பழைய குடும்ப பதிவுகளை எடுத்துவந்தேன். அவர்கள் 1906 என்னவாக இருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா. என்னுடைய தகப்பனாருடைய மணவாட்டியாக. அந்த வருடம் தான் அவர்களுக்கு திருமணம் ஆயிற்று. இப்பொழுது அவர்கள் வேறு ஒரு மணவாட்டியின் பாகமாக இருக்கிறார்கள். அது கர்த்தராகிய இயேசுவின் மணவாட்டி. யாரோ ஒருவர் எங்கிருந்தோ எனக்கு ஒரு நிக்கல் காசு அனுப்பி வைத்தார்கள். அது என்னுடைய ஜோபில் இருக்கிறது. 1906 மற்றும், 'பரிசுத்த ஆவியானவர் அவர் வரும் போது உங்களுக்கு நான் சொன்ன இவைகளை வெளிப்படுத்துவார் மற்றும் உங்களுக்கு வரப்போகிற காரியங்களையும் காண்பிப்பார்''. 87இப்பொழுது என்ன இது? இந்த வேட்டைப் பிரயாணம் என்னை வலுவாகச் செய்கிறது பாருங்கள்‚ நான் சென்றதில் இதுதான் மிகவும் அருமையான பிரயாணம். இந்த மாதிரி அதிர்ச்சி வரும் என்று தெரிந்து... அது தான் அன்பு. ஆகவே சகோதர, சகோதிரிகளே, பரிசுத்தாவியானவர் காண்பித்தது போல் இந்த தரிசனங்கள் யாவும் பரிபூரணமாக சரியாக இருக்கிறது. அது அப்படியாக நிறைவேறினால் அது பரிசுத்த ஆவியானவர் தான். அது அவர் கொடுத்ததாக இருக்கிறது என்று வேதாகமம் சொல்லியிருக்கிறது. அப்படியானால் எப்பேற்பட்ட நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம், ஏதோ ஒரு நாளில் நாம் இந்த இடத்தை விட்டுப்போவோம். நாம் திரும்பவும் வாலிப புருஷனும், வாலிப ஸ்திரியுமாக மாறுவோம். இனி மரிக்கப்போவதில்லை. நான் ஆயிரம் வருடங்கள் ஜீவித்து இந்த உலகத்துக்கு ஜனாதிபதி ஆகப் போவதை அறிந்து கொள்வதைக்காட்டிலும் நான் தேவனுடைய கரத்தில் இருக்கிறேனா என்று அறிந்து கொள்வதையே விரும்பி இருக்கிறேன். 88மற்றும் இந்த இரவுப்பொழுதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. அந்த கூற்றைச் சொன்ன இயேசு அவர் இரண்டாயிரம் வருடம் கழிந்து இப்போது இங்கு இருக்கிறார். பாருங்கள், அது அழிந்து போகாது. அது நித்தியமானது மற்றும் அவர் அந்தநாளில் அந்த கூற்றைச் சொன்ன அதே இயேசுவாக இங்கே இருக்கிறார். நாம் விசுவாசிப்போமானால் அவர் இன்னுமாக வார்த்தையை உறுதிபடுத்துபவராக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 'பரிசுத்த ஆவியானவர், அவர் வரும் போது அவரைக் குறித்து அவர் பேச மாட்டார். என்னுடைய காரியங்களை எடுத்துப் பேசுவார்“ (அது தான் வார்த்தை). மற்றும் அவர் உங்களிடம் அவைகளைக் காண்பிப்பார். வரபோகிற காரியங்களையும் காண்பிப்பார். எபிரெயர் எழுதின நிரூபத்தில் நான்காவது அதிகாரத்தில் வேதாகமம் சொல்கிறது 'தேவனுடைய வார்த்தை கருக்கானதாயும்……, இப்பொழுது யார் அந்த வார்த்தை? இயேசு. 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி வாசம்பண்ணினார்“. தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது''. 89அவரே நம் தேவன். நாம் இழக்கப்படவில்லை நண்பர்களே. நாம் இன்னமும் தேவனுடைய கிருபையின் கீழ் இருக்கிறோம். எனக்கு கடந்த காரியத்தைக் குறித்துப் பேசத் தோன்றுகிறது. மற்றும் நேற்றைய இரவில் சொன்னது போல் அந்த சீஷர்கள் அவர்கள் முந்தைய தினத்தில் கூட்டத்தில் கேட்டதை ஜீவிக்க முயற்சித்து மற்றும் இன்னொரு கூட்டத்துக்காக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் படகில் மோதும் காற்றையும் மற்றும் அலைகளையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை மறந்துவிட்டார்கள். அந்த மலைகளின் மேலாக இருந்து அவர் வார்த்தையின்படியாக அந்த வெள்ளிமுனை பெரிய கரடியை அங்கேவைத்த தேவன். இப்பொழுது அது சாட்சியாக அந்த தரையில் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அந்த மனிதருக்கு எழுதிக் கேட்க வேண்டுமானால் அப்படியாக எழுதுங்கள் பட், சௌதவிக் பட், சௌதவிக் போர்ட், செயின்ட் ஜான், பிரிட்டிஷ் கொலம்பியா, மற்றும் அவர் உங்களுக்குப்பதில் அளிக்க காத்திருங்கள். அப்படியாக.... உங்களுக்கு வேட்டையாட பிரயாணம் எடுப்பீர்கள் என்றால், உங்களோடு செல்ல ஒரு நல்லவழிகாட்டி இருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள், நான் அடுத்த முறை அங்கே போகும்போது ஒரு கூட்டத்தை நான் நடத்துவேன் என்று எண்ணி; அவர் ஆம் சொல்லப்பட்ட இந்த காரியங்கள் அப்படியாக நடப்பதைப் பார்ப்பதற்காக அங்கு அந்த பகுதியில்இருக்கும் எல்லா வேட்டைக்காரர்களிடமும் இதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். 90அது கடந்த வருடமாக இருந்தது. இப்பொழுது இது இந்த வருடமாக இருக்கிறது. நமக்கு வாக்குஅளித்த அதே இயேசு, 'நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை“, 'இந்த உலகம் முடியும் வரை நான் எப்பொழுதும் உன்னோடு இருப்பேன்”, என்றார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த மாதிரியான சாட்சிகள் மற்றும் நிரூபணமான சத்தியம் உறுதியான சத்தியம் இருக்கும் போது அந்த கூரையின் வழியாகச் சென்று எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற எண்ணத்தைப் போல நாம் எப்படி வேறு விதமான உணர்வுகளைக் கொண்டிருக்க முடியும். நாம் பார்க்கும் முக்கியமான நிகழ்வுகள் சத்தியத்தை உண்மை என்று நிரூபிக்கும்போது... இந்த உலகத்துக் காரியங்களை நாம் அனுமதித்ததால் நம்மை மந்தமாக்கினதோ‚ 91வாக்களித்தவரும், அந்த வாலிபனிடமிருந்து காக்காய் வலிப்பை நீக்கியவருமான அதே தேவன் இப்பொழுது சரியாக இங்கே இருக்கிறார் என்று சுகவீனமாக இருக்கும் நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களாக. நான் உங்களிடத்தில் உள்ள வியாதியை எடுத்துப் போட என்னால் முடியுமானால்‚ நான் சொல்வேன். ஆனால் என்னால் அதுமுடியாது. அவர் உங்களுக்கான சுகத்தை வாங்கிவிட்டார். நீங்கள் அதை விசுவாசிப்பதுமட்டுமே நீங்கள் செய்யக் கூடியதாகும். இப்பொழுது அந்த வாலிபன் காக்காய் வலிப்பினால் விழுந்த போது அந்த சிறிய ஸ்திரீ, 'அந்த சட்டைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்“, என்று சொல்லியிருந்தால்‚ அது அவரிடம் மட்டும் தான்‚ வேறு ஒருவரிடம் இது வேலை செய்யாது. ஏனெனில் அது அவருக்குக்காகவே அனுப்பப்பட்டது. நாகமான் ஏழு முறை ஆற்றில் முழுகினான். ஆனால் வேறு ஒருவர் அதில் முழுகினால் ஒரு வேளை அந்த குஷ்டத்தில் இருந்து விடுபட்டு இருக்கமாட்டார்கள். பாருங்கள்? ஆனால் கவனியுங்கள். அவர் என்ன சொல்லுகிறாரோ அது தான் சத்தியம் நிரூபிக்கப்பட்ட பரிபூரண சத்தியம். 92இப்பொழுது கால தாமதமாகிவிட்டது. ஜெபவரிசை அழைப்பதற்கு நாம் ஒரு நிமிடம் அதை நிறுத்தி வைப்போம். சற்று நாம் யோசிப்போம். இதைத் தான் தேவன் வாக்களித்தார், அசலான பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்பவராக இருக்கிறார். அது சரிதானே? அவர் பரிசுத்தாவி இல்லை என்று யார் சொல்லக் கூடும்? அவர் தான், 'நானும் என் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்'', பரிசுத்தாவியானவரே, அவரது பிதா 'அவள் பெறுவாள்... அவளுக்குள் உருவான அந்த பரிசுத்தமானது பரிசுத்தாவியால் உண்டானது“, என்று சொல்லப்பட்டது. ஆகவே, பரிசுத்தாவியும் தேவனும் ஒரே ஆவியாகும், அது அவருக்குள் இருந்தது. மேலும் கவனியுங்கள், அவர் என்ன செய்தார். அந்த ஸ்திரீ அவர் வஸ்திரத்தை தொட்ட போது அவர் அந்த கூட்டத்தில் ஊடாகப் பார்த்து அவர்களுடைய எண்ணங்களை வகையறுத்தார். வார்த்தை இப்படியாக சொல்லவில்லையா, 'தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' யோவான் எழுதின சுவிசேஷம்12 அல்லது 14:12-ல் 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'', என்று அவர் வாக்குத்தத்தம் செய்யவில்லையா? அது எப்போதாவது தோல்வி அடைந்திருக்கிறதா? அது சத்தியமாக இருக்கிறதல்லவா? 93ஆகவே தேவன் இங்கு இருக்கிறார். இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் சுகமாக்கவே இங்கு இருக்கிறார், எல்லா இழந்துபோன ஆத்துமாக்களையும் இரட்சிக்க இங்கு இருக்கிறார், நான் பலிபீட அழைப்பைச் செய்யும் முன், நான் அப்படியாக அழைப்பதற்கு உணர்த்தப்படுகிறேன், பாருங்கள்‚ அவரை அழைப்போம். எத்தனை பேர் எல்லாவற்றையும் விட்டுச் சொல்லுவீர்கள். அல்லது 'என்னால் முடியுமானால்...“ஒரு வேளை இங்கு அந்நியர்கள் இருக்கக்கூடும். அவர்கள் நான் இப்படிப்பட்ட கூட்டம் ஒன்றையும் பார்த்ததில்லை. நான் மக்கள் இதைக்குறித்து பேசுவதைக் கேள்விப்பட்டேன். ஆனால் இதைப் பார்த்ததில்லை என்பார்கள். கிறிஸ்துவின் பிரசன்னம் மக்கடாக வருவதைப்பார்த்து, அவர் செய்த அதே காரியத்தைச் செய்வார் என்றால் என்னுடைய இருதயத்துக்கு ஊக்குவித்தலாக இருக்கும் என்பீர்களானால் அது உங்களுக்கு ஊக்குவித்தலாக இருக்குமா? நாம் ஒரு வார்த்தை பேச தலைகளைத் தாழ்த்துவோம். வார்த்தைக்கு எல்லா கண்களும் மூடியிருக்க, இப்பொழுது வார்த்தையைப் பின்பற்ற வரும் ஆவியை அனுமதியுங்கள். 94இப்பொழுது பிதாவே எனக்குத் தெரிந்த சிறந்ததைச் செய்கிறேன். என்னுடைய இருதயத்தை அறிவீர்; இங்கு இருக்கும் வெப்பத்தினால் இந்த மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். மற்றும் கூட்டம் அதிகமாக இருப்பதினால் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் பொறுமையாக இருக்கிறார்கள். இதே மாதிரியான கூட்டம் அந்தக்கரையில் நீர் படகிலிருந்து பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். மற்றும் நீர் அவர்களிடம் சொன்னீர் ஆழமான இடத்திற்குச் சென்று உங்கள் வலையை ஒருமுறை வீசுங்கள் என்றீர். அங்கு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு அல்ல, அங்கே அவைகள் இருந்தன. 'ஆண்டவரே இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறோம்'' என்று அந்த அப்போஸ்தலர்கள் இந்த குறிப்பிட்ட வார்த்தையைச் சொன்னார்கள். மேலும் அவர்கள் உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தபோது அவர்களுடைய வலைகள் உடையுமளவுக்கு அவர்கள் திராளான மீன்களைப் பிடித்தார்கள். 95கர்த்தராகிய இயேசுவே சந்தேகமின்றி அந்தகாலையில் அநேக ஸ்திரீகள் துணிகளை தோய்ப்பதை விட்டு விட்டு, புருஷர்கள் தங்கள் நிலத்தின் விளைச்சல்களை விட்டு விட்டு மற்றும் மீன் பிடிப்பவர்களும் தங்கள் வலையை விட்டுவிட்டு தேவனுடைய வார்த்தையைக் கேட்க வந்திருப்பார்கள். நீர் உம்முடைய மாம்ச சரீரத்தில் இந்த இரவிலே இங்கு இருப்பீரானால் அன்றைக்கு கூடினவர்களுக்கும் மேலானதாக இன்றைக்கு அதிகமானவர்கள் கூடியிருப்பார்கள் என்பது சந்தேகமே. ஆனாலும் இங்கு இருக்கும் மக்கள் நீர் மரித்தவராக இல்லை என்று விசுவாசிக்கிறார்கள். மற்றும் நீர் உயிர்த்தெழுந்தீர் என்றும்; மேலும் நீர் உம்முடைய வார்த்தையை பிரத்தியட்சமாக்குகிறீர் என்றும்; உம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறீர் என்றும் நம்புகிறார்கள். மற்றும் பரிசுத்த வசனத்தில் இருந்து நான் இந்த இரவுப்பொழுதில் அந்த வார்த்தையைப் படித்தேன். ஒரு விசை நமது கர்த்தரிடத்தில் வேதாகமம் அல்லது சுருள் கொடுக்கப்பட்டபோது, அவர் படித்துவிட்டு இந்த நாளில் இந்த வேதவசனம் நிறைவடைந்தது என்று கூறி உட்கார்ந்தார். அது திரும்பவும் நடக்கட்டும். கர்த்தாவே நான் படித்த வேதவசனம் நிறைவேறட்டும், அது திரும்பவும் இந்த நாளிலே இந்த இரவிலே நடக்கட்டும். நாங்கள் யாவரும் இந்த வாரம் முழுவதும் போதிக்கப்பட்டபடி இது கடைசிக்காலம் என்று நிரூபிக்கப்படுவதற்கும் மற்றும் எங்கள் இதயம் சந்தோஷமாக இருப்பதாக‚ ஆண்டவரே நீர் பேசும்படி இங்கு அநேகர் உள்ளனர். இந்த இரவுப்பொழுதில் உம்முடைய வார்த்தையை அறிந்து கொள்வதற்கு எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய வார்த்தை உண்மை என்று நிரூபணமாகட்டும். 96மற்றும் நாம் தலைகளை தாழ்த்தியிருக்கும் வேளையில் என்னை பிரசங்கத்திலிருந்து ஒருவித வழியில் அமைதிப்படுத்துவதற்கு இங்கு இருக்கும் எத்தனை பேர் நிஜமாக மறுபடியும் பிறந்த கிறிஸ்துவர்களாக இல்லை? இப்பொழுது நீங்கள் சபைக்கு போவீர்கள். ஆனால் அதை நான் கேட்கவில்லை நீங்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்துவர்களாக இல்லாமல் இருப்பீர்கள்‚ ஆனால் நிஜமான பரிசுத்தஆவி, ஜீவிக்கிற கிறிஸ்து இருக்கிறார் என்று விசுவாசித்தால், மற்றும் இப்பொழுது அவர் உங்களை நினைவு கூர வேண்டும் என்று எண்ணுவீர்கள் என்றால் (உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்ட, கண்கள் மூடப்பட்ட நிலையில்) உங்கள் கரங்களை மேலாக அவரிடம் உயர்த்துங்கள், 'ஆண்டவரே என்னை நினைவுகூறும்'', என்று‚ தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; உங்களை ஆசீர்வதிப்பாராக‚ உங்களை ஆசீர்வதிப்பாராக‚ உங்களை ஆசீர்வதிப்பாராக‚ இது அருமையாக இருக்கிறது. வேறு யாரேனும் இருக்கிறீர்களா?. இப்பொழுது நாம் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் இல்லை. ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகம் தான் பெரிய கூட்டங்களையும் மற்றும் பெரிய காரியங்களையும் எதிர்பாக்கும்‚ நேற்று சாயங்கால நேரத்தில் சொன்னது போல் அந்த மெல்லிய அமர்ந்த சத்தம் தான் தீர்க்கதரிசியைக் கவர்ந்து, திரையிட்ட முகத்தோடே முன்னே வரச் செய்தது. 97இப்பொழுது நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். என் சகோதர மற்றும் சகோதரியே தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள்; மற்றும் நம்முடைய மகத்தான அன்பான கர்த்தராகிய இயேசு வார்த்தை இருக்கும் இடத்திற்கு வருவார். அவருடைய சொந்த வார்த்தை திறக்கப்பட்டிருக்கையில் அப்பொழுது நான் பேசும் இந்த பரிசுத்த ஆவியானவர் அது சத்தியமே என்று உங்களுக்கு நிரூபிப்பார். நீங்கள் அநேக முறை வெவ்வேறு காரியங்களைக் கொண்டு குழம்பி இருக்கக்கூடும். இது என்னவென்றால், மெய்யான காரியம் ஒன்று எங்கோ இருக்கிறது என்று காண்பிக்கிறது. அவர் அப்படியாகச் செய்யும் போது கரங்களை உயரத்தினவர்கள் என்னிடத்தில் ஒரு நிமிடம் வந்து பார்க்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நீங்கள் தலைகளை உயர்த்தலாம். கர்த்தராகிய இயேசுவே இந்த ஆராதனையை உம்முடைய கரத்தில் எடுத்துக்கொள்ளும். நான் உம்முடைய ஊழியக்காரன். மேலும், எல்லாப் பிரசங்கமும் மற்றும் நாங்கள் எங்கள் ஜீவியகால முழுவதும் சொல்லும் வார்த்தைகளையும் விட உம்மிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தை எங்களுக்குப் பெரியதாக இருக்கும், ஒரே வார்த்தை மட்டுமே‚ அதை இப்பொழுதே அருளும் பிதாவே. நான் இந்த சாட்சிகளை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். அவைகள் உண்மையானவை என்று நீர் அறிவீர். பிதாவே நீர் தான் அதைக் கொடுத்தீர். அது ஒரு போதும் தோல்வி அடைந்ததில்லை. இயேசு கிறிஸ்து நாமத்தில் அதை அருளும். ஆமென். 98இப்பொழுது இங்கு இருக்கும் எத்தனை பேர் வியாதிபட்டவர்களுக்கு ஜெபஅட்டை இல்லை. இந்த கட்டிடத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் வியாதியஸ்தர்களுக்கு ஜெப அட்டை இல்லையென்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி ஜெப அட்டையை வைத்திருப்பவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அதே அளவு தான் மற்றும் எல்லோரும் கலந்து இருக்கிறார்கள். முதலாவதாக தேவனுக்கு முன்பாக உத்தமமாக இருக்க எண்ணுகிறேன். அதற்கு முன்பு நான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் இந்த மூலையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். சகோதரர் நோயல் மற்றும் சகோதரி ஜோன்ஸ் மேலும் சகோதரர் அவுட்லா, என்னுடைய மகன், இங்கிருக்கும் இந்த சகோதரர் மற்றும் சகோதரர் மூர் எனக்கு இந்த சகோதரரைத் தெரியாது. ஆனால் அவரைக் கடந்த சில கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன். இந்த சகோதரர் எனக்கு முகத்தை வைத்து தெரியும். ஆனால்அவருடைய பேர் எனக்கு நினைவில்லை. இங்கு இருக்கும் சகோதரி அவர்கள் சகோதரி வில்லியம்ஸ் அந்த மூலையில் சகோதரி ஷாரிட்; பின் பக்கமாக உள்ள சிலர் ஜெபர்சன்வில் கூடாரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். 99இங்கே எதிரே உட்கார்ந்து இருப்பவர் என்னுடைய விலையேறப்பெற்ற வயதான நண்பர் தொண்ணூறு வயதாகிறது. அவர் ஓஹியோவிலிருந்து வாகனம் ஓட்டிகொண்டு தேசம் கடந்து வருகிறார். மற்றும் நான் ஆப்பிரிக்காவுக்கு செல்லப்போகிறேன். இவரும் மற்றும் இவருடைய அருமையான மனைவியும் என்னோடே ஆப்பிரிக்காவுக்கு வரலாமா என்று கேட்டார்கள் தொண்ணூறு வயதுடையவர். ஒரு ஜெர்மானிய சகோதரர் கர்த்தரை அறிந்திராதவர். ஒரு இரவில் நான் பிரசங்கித்த போது அவர் நல்ல உடைகளை அணிந்தவராக என்னிடம் ஞானஸ்நானம் எடுக்கும்படி வந்தார் தொண்ணூறு வயதுள்ளவர். வெளியே, ஓ, இது சகோதரர் வால்ட்ராப் மற்றும் சகோதரி வால்ட்ராப் அங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவ்வளவுதான்; மற்றும் சகோதரர் பார்டர்ஸ்‚ அவ்வளவு தான். இப்பொழுது அவர்கள் பெயர்களை வைத்து அழைப்பேன். இப்பொழுது உங்களில் என்னைத் தெரிந்தவர்கள் ஜெபிக்கவராதீர்கள் பாருங்கள்? எனக்காக ஜெபியுங்கள். 100ஆனால் என்னை அறிந்திராதவர்கள் மற்றும் நான் அவர்களை அறியவில்லை என்று தெரிந்தவர்கள் நீங்கள் இப்படியாக உங்கள் இருதயத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். 'கர்த்தராகிய இயேசுவே நான் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டேன், இந்த ஊழியக்காரர் இந்த வேதாகமத்தில் இருந்து படித்ததை நான் கேட்டேன், நான் இந்த சாட்சிகளைக் கேட்டேன். மற்றும் இது போலவே பல வெவ்வேறு நேரங்களில் நடந்த காரியங்களையும் கேட்டிருக்கிறேன். நாங்கள் கடைசி காலத்துக்கு அவ்வளவு நெருங்கி இருக்கிறோமா ஆண்டவரே? அவ்வளவு நெருங்கி இருக்கிறோமா?'' அந்த அடையாளம் சோதோமில் செய்யப்பட்டபோது அந்த பட்டணம் எரிக்கப்பட்டதை நினைவு கூருங்கள். இயேசு அதை இப்படியாக மேற்கோளிட்டார். அங்கே நடந்ததுபோல; அது தான் அடையாளமாக அவர்கள் பெற்றார்கள். அந்த பட்டணம் அழிக்கப்படுவதற்கு முன்னால் மனுஷகுமாரன் வரும்போது அதே காரியம் மறுபடியுமாக நடக்கும் என்று இயேசு சொன்னார். அதுசரிதான் என்று இப்பொழுது உங்களுக்குத் தெரியும். எப்படியாக மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் தன்னில் எல்லாவற்றையும் உடையவர் அப்படித்தான் இருந்தார். (all sufficient). ஆபிரகாமுடன் பேசினது தேவன் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? வேதாகமம் சொல்கிறது ஏலோஹிம் என்று; ஆகவே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த அந்த மகத்தான சிருஷ்டிகர். 101அவர் எதை காண்பிக்கிறார் அவர் மனித சரீரத்தில் அங்கே நின்றார். மற்றும் கன்றுக்குட்டியின் மாம்சத்தை உண்டார், பசும்பாலைக் குடித்தார். மேலும் அங்கு இருந்து மாயமாக மறைந்து போக முடிந்தது. 'நான் வாக்களித்த குறித்த காலத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்“, பாருங்கள்?அவனை பேர் சொல்லி அழைத்தார்; மற்றும் அவர் பின்புறமாகத் திரும்பி இருந்த போதிலும், ''சாரா எங்கே” என்று கேட்டார். 'அவள் உமக்கு பின்னால் இருக்கும் கூடாரத்தில் இருக்கிறாள்“, என்று ஆபிரகாம் சொன்னான். அவர், 'நான் ஒரு உற்பவகாலத்திட்டத்தில்; உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்“, என்றார். மற்றும் சாரா பின்னால் உள்ள கூடாரத்திலிருந்து சொன்னாள்... அவர், 'சாரா ஏன் சிரித்தாள்”, என்றார். அவள் பின்னால் இருக்கும் கூடாரத்தில் இருந்தாள் என்று, வேதாகமம் சொல்லி இருக்கிறது உங்களுக்கு நினைவு இருக்கிறதா, அவர், ''சாரா ஏன் சிரித்தாள்?'', என்றார். ''நான் சிரிக்கவில்லை'', என்று சாரா சொன்னாள். ''ஆம் நீ சிரித்தாய்'', என்றார். பாருங்கள்? அது சரியே. ஒரு மனிதன் அங்கு இருக்கிறார். தேவன் அந்த மாம்சசரீரம் மூலமாக தன்னையே பிரிதிநிதித்துவப்படுத்தினார். மனுஷகுமாரன் வருகையிலும் அவ்வாறே இருக்கும் என்று இயேசு சொன்னார். தேவன் அவர் சபைக்குள்ளாக; நீங்களும் நானும் அவருக்குப் பிரதிநிதியாக உள்ளோம். இப்பொழுது, அங்கே ஒரு சிறிய ஸ்திரீ இருந்தாள்... 102தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தபோது ஆவியானவர் அவருக்குள் முழுமையாக இருந்தார். அவர் தேவன். நான் வெறும் அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவன். மற்றும் நீங்களும் அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவர். நாம் ஆவியை ஒரு அளவில் பெற்றிருக்கிறோம். அவரோ அளவில்லாமல் பெற்று இருந்தார். அவருக்குள் சரீரப் பிரகாரமாக தேவத்துவம் முழுமையாக இருந்தது. என்னுள் அது ஒரு சிறிய வரமாக மற்றும் உங்களிலும் ஒரு வரமாக இருக்கிறது. ஆனால் அது எவ்வளவு சிறய அளவாக இருந்தாலும் அது அதே ஆவியாக இருக்கிறது. இப்பொழுது அது தேவனுடைய ஆவியாக இருக்குமானால் அது தேவனுடைய கிரியைகளைச் செய்யும். இப்பொழுது நீங்கள் ஜெபித்துச் சொல்லலாம்' கர்த்தராகிய இயேசுவே ஒருவிசை ஒருசிறிய ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்'' மற்றும் நாங்கள் இங்கே புதிய ஏற்பாட்டில், 'எபிரெயரில், அவர் இப்பொழுது நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்கிறது. அவ்விதம்தான் வேதாகமத்தில் உள்ளது என்று எத்தனைபேருக்கு தெரியும். ஆமென் என்று சொல்லுங்கள். நிச்சயமாக; அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். 103நல்லது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரானால் அவர் எவ்வாறு பதில் அளிப்பார்? அவர் நேற்று செய்தது போலவே இன்றும் மாறாதவராக இருப்பாரென்றால் இப்பொழுது நீங்கள் ஜெபம்பண்ணி சொல்லுங்கள். 'கர்த்தராகிய இயேசுவே உம்முடைய வஸ்திரத்தை நான் தொடட்டும் அதன் பிறகு எங்களை உற்சாகப்படுத்த நீர் சகோதரர் பிரன்ஹாமுக்கு ஒரு சிறிய வரம் கொடுத்தீர். அவருக்கு என்னைத் தெரியாது. நான் இங்கே பின்னாலே உட்கார்ந்து இருக்கிறேன்'' (மற்றும் இங்கு அல்லது அங்கு அல்லது எங்கேயெல்லாம்) அவருக்கு என்னைத் தெரியாது. ஆனால் உமக்கு என்னைத் தெரியும். மேலும் உம்முடைய மகத்தான ஆவியைப் பார்க்கட்டும், நான் பார்க்க வேண்டும் என்று இல்லை. ஆனால் என்னையும் மற்றும் மற்றவர்களையும் ஊக்குவிக்க உதவி செய்வீராக. ஏனெனில் நாங்கள் வார்த்தையைப் படித்தோம். அதன்படி உம்முடைய வஸ்திரத்தைத் தொடுகிறோம். அதன் பிறகு நீர் எங்களோடே பேசுவீராக. இந்த இரவுப் பொழுதில் அந்த நோக்கத்துக்காக என்னை உபயோகிப்பீராக. ஆண்டவரே, மேலும் 'அது நீர் இன்னும் ஜீவிக்கிறீர்'' என்று இந்த மொத்த கூட்டத்துக்கும் காண்பிக்கும். அவர் அப்படிச் செய்தால் அது அருமையாக இருக்கும் அல்லவா? 104''ஆண்டவரே நான் உமது வஸ்திரத்தைத் தொடட்டும்'', என்று சொல்லுங்கள். நான் ஆவியானவருக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். அதன் பிறகு பரிசுத்த ஆவியானவரே மற்றதை செய்யட்டும் இப்பொழுது நான் பேசினேன், சாட்சி சொன்னேன் இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது; நான் என் சாலையின் கடைசியில் இருக்கிறேன் என்று இப்பொழுது உங்களுக்குள் அமைதியாக ஜெபியுங்கள். நான் கூட்டத்தை கவனிப்பேன்; நான் பார்க்க வேண்டும்; நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுவீர்கள். என்னுடைய இடது பக்கத்தில் இந்த கட்டிடத்தில் நடுப்பகுதியில் பின்வரிசையில் மிகவும் பின்னால் ஒரு ஸ்திரீ ஜெபித்து கொண்டிருக்கிறார். தேவன் அவளுக்கு உதவிசெய்யவில்லை என்றால் அவள் மரிக்கிற நிலையில் உள்ளாள். அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது. மற்றும் அந்த புற்றுநோய் அவளுடைய மார்பகத்தில் இருக்கிறது. ஓ, இதை அவர்கள் தவற விடக்கூடாது. எனக்கு உதவி செய்யுங்கள். ஓ, ஆண்டவரே சகோதரி நீ விசுவாசிப்பாய் என்றால் (அவள் இதை தவறவிடப்போகிறாள்). ஆண்டவராகிய இயேசுவே எங்களுக்கு உதவிசெய்யும். நாங்கள் ஜெபிக்கிறோம், மேரிமே அதுதானா? அதுவே தான். நாம் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக இருக்கிறோமா? எனக்கு உன்னைத் தெரியாது; உனக்கு என்னைத் தெரியாது. அதுதான் அந்த உன்நிலையா மேலும் நான் சொன்னதெல்லாம் சத்தியம் தானா? அப்படியானால் விசுவாசி; எல்லாம் முடிந்துவிடும். 105இப்பொழுது அந்த இருள் முடிந்து அவளிடம் வெளிச்சமாகிறது. அந்த வாலிபன் போல் நிச்சயமுள்ளவனாய், அந்த காக்காய் வலிப்பு அவனை விட்டு விலகியே இருந்தது. அந்த வடக்கு காட்டுப்பகுதிகளில் இருந்த அதே தேவன், அவரே தான் இங்கும் இருக்கிறார். அப்படியாக விசுவாசித்துக் கொண்டு இருங்கள். ஆமென், 'நீங்கள் விசுவாசிப்பீர்களானால்''... இங்கே என் முன்னால் அமர்ந்திருக்கிற ஒரு ஸ்திரீயின் மேல் உள்ளது. அவளுடைய முதுகில் பிரச்சனை. அது அவளுடைய முதுகில் உள்ள இணைப்பு எலும்பு விலகல். அவள் இந்தப் பகுதியில் இருந்து வரவில்லை, அவள் மோன்டானாவிலிருந்து வந்தவள். அவள் பெயர் செல்விஸ்டப்ஸ், எழுந்து நில், உன் சுகத்தை இயேசு கிறிஸ்து நாமத்தில் பெற்றுக்கொள். நீங்கள் முந்தித்தள்ள வேண்டாம். அமைதியாயிருங்கள். இதோ இங்கே இருக்கும் பெரிய நபர் இங்கே அமர்ந்து,என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது போல் இருக்கிறார். விசுவாசியுங்கள் நீங்கள் சுகமடைவீர்கள். உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கிறது. நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் தேவன் உங்களை நலமாக்குவார். 106பெண்களுக்கு உள்ளான பிரச்சனை இருக்கும் சீமாட்டியே விசுவாசி. நீ சுகமடைவாய். உன் வீட்டுக்கு செல், மற்றும் தேவனிடத்தில் விசுவாசமாய் இரு. இப்பொழுது நான் ஏன் வீட்டுக்கு செல் என்று சொன்னேன். நீ வீட்டுக்குப் போவதற்கு நியூ மெக்ஸிகோ போகவேண்டும். திருவாளர் மற்றும் திருமதி வாட்கின்ஸ். இப்பொழுது எனக்கு உங்களைத் தெரியாது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அறிவீர்கள். ஆமென். உங்களுக்கு சரியாக பின்னால் இருக்கும் காலில் சீழ்புண் உள்ள அந்த சீமாட்டி செல்வி பிரவுன், தேவன் உனக்கு கொடுப்பார் என்று நீ விசுவாசிப்பாயா? நீ மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாய். இப்பொழுது என் ஜீவியத்தில். நான் உன்னைப் பார்த்ததேயில்லை என்று உனக்குத் தெரியும். அந்த இடது காலில், இப்பொழுது உன் முழு இருதயத்தோடு விசுவாசி, சுகமடைவாய். ஒரு சீமாட்டி அசைய முயற்சிக்கிறார். அவருக்கு முடக்கு வாதம் அது அவரை அதிகமாக தொல்லைப்படுத்துகிறது. திருமதி ஃபேர்ஹெட் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்கள் என்றால் நீங்கள் சுகமடைவீர்கள். உங்களை என் ஜீவியத்தில் நான் பார்த்ததேயில்லை என்று உங்களுக்குத் தெரியும். ஆமென். இப்பொழுது நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது அவர் என்ன செய்வார்? அவர் நான் சொன்ன காரியத்தை எடுத்து உங்களுக்குக் காண்பிப்பார் மற்றும் அவர் வரப்போகிற காரியங்களையும் காண்பிப்பார். நான் சொல்லுவது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் மறுபடியும் தலைகளை தாழ்த்துவோம். 107இங்கிருந்து (உலகத்திலிருந்து) நீங்கள் கடந்து செல்லும்போது நீங்கள் இதுவாக இருக்கலாம்... இதுவாக இல்லாமலுமிருக்கலாம்... நீங்கள் கடந்து செல்லவேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய... ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் இராஜ்யத்தைக் காணமாட்டான்'', என்றார். நீங்கள் இங்கே வந்து நிற்பீர்களா? நாங்கள் உங்களுக்கு இங்கேயே ஒரு நிமிடம் ஜெபிப்போமா?. இப்பொழுது நீங்கள் ஏன் இங்கு வரக்கூடாது? அவருடைய ஆவியின் பிரசன்னத்தில் சரியாக இங்கே நீங்கள் வருவீர்களா? கர்த்தருடைய வருகையை காணும்வரை வேறு ஒரு பெரிய காரியங்கள் நடப்பதை நீங்கள் காணப்போவதில்லை. இப்பொழுது நினைவு கூருங்கள், நான் என்ன பேசுகிறேனோ அதில் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். இல்லயென்றால் எனக்கு இந்த ஊழியத்தை அவர் அருளமாட்டார். இப்பொழுது இது உங்களைக் கடந்துபோக அனுமதிக்காதீர்கள். நீங்கள் உத்தமமாக இருக்கிறீர்களா? நீங்கள் வருவீர்களா? இல்லையென்றால் அது உங்களுக்கும் மற்றும் தேவனுக்கும் இடையேயுள்ளது. நான் குற்றமற்றவன். நான் எல்லா ரத்தபழியிலிருந்தும் நீங்கியிருக்கிறேன். ஏனெனில் நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு வார்த்தையைப் பிரசங்கித்தேன், அவர் என்னவாக இருக்கிறார் என்று சொன்னேன். மற்றும் அப்பொழுது அவர் வரும்போது அவர் என்னவாக இருந்தார் என்பதை நிரூபிப்பார். மற்றும் அவர் என்னவாக இப்பொழுது இருக்கிறார் என்று என்னை நிரூபிக்கச்செய்கிறார். அவர் அப்பொழுது எப்படி இருந்தாரோ இப்பொழுதும் அப்படியாகவே இருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 108இங்கு மற்றவர்கள் எத்தனை பேர் வியாதியஸ்தர்களாக இருக்கிறீர்கள். கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது ஒருவர் மீது ஒருவர் கரம் வையுங்கள். நாம் விசுவாசமுள்ள ஜெபத்தை உங்களுக்காக ஏறெடுப்போம். இப்பொழுது உங்களிடத்தில் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். தேவன் மட்டும் வந்து உங்களுக்கு அந்த அதிசயத்தைச் செய்வாரானால்; ஒரு அதிசயத்தை விவரிக்க முடியாது. இப்பொழுது நீங்கள் இந்த மக்களிடம் இதைக் குறித்துக் கேட்க வேண்டும் என்று எண்ணுவீர்களா எந்த நேரத்திலும் எங்கேயும் கேட்கலாம். பாருங்கள்‚ அது தேவன் என்பதை நினைவு கூறுங்கள். இங்கு இருப்பதோ ஒரு கற்றுகுட்டியின் தரிசனங்கள். எது அதைச் செய்கிறது? அது நீங்கள் தான், நீங்கள் தான்; அதைச் செய்வது நீங்களே‚ 109பாருங்கள் அந்த ஸ்திரீயானவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட போது அவர் வல்லமை என்னிடத்தில் இருந்து வெளியேறியது என்றார். ஆனால் லாசருவைக் குறித்து பிதாவானவர் காண்பித்த போது மற்றும் அவர் அங்கு இருந்து சென்று மறுபடியுமாக வந்து மரித்தோரில் இருந்து லாசருவை உயிர்த்தெழச் செய்தபோது அவர் வல்லமையைக்குறித்து... சொல்லவில்லை. அவருடைய வரத்தை தேவன் உபயோகித்தார். மற்றுமுள்ள அந்தக் காரியத்தில் தேவனுடைய வரத்தை ஸ்திரீ உபயோகித்தாள். நான் தேவனுடைய வரம் அல்ல. இயேசுகிறிஸ்து தான் தேவனுடைய வரம். அது எனக்குக் கொடுக்கப்பட்ட வெறும் வரம். ஆழ்மனதும் மற்றும் உணர்வும் ஒன்றாக இருக்கும்படி நான் பிறந்தேன். நீங்கள் தூங்காமல் அப்படியே பார்ப்பது போன்றது. பரிசுத்த ஆவியானவர் எப்படியாக முதலாம் உணர்வுக்குள் வருவதுபோல் அந்த ஆழ்மனது உணர்வுக்குள்ளும் வருகிறார். அது உங்கள் ஆழ்மனது உணர்வுக்குள் வருமானால் நீங்கள் ஒரு ஆவிக்குரிய கனவுகளைக் காண்பீர்கள் அது என் மேலாக வருமானால் நான் கனவு காணமாட்டேன். நான் அப்படியாக நேராகவே பார்ப்பேன். பாருங்கள்? உங்களால் வேறு ஒருவிதத்தில் மாறுபட்டுமாற்ற முடியாது. நீங்கள் அப்படியாக பிறந்திருக்கிறீர்கள், வரங்களும் மற்றும் அழைப்பும் மனதிரும்புதல் இல்லாமலே'' இது எதைச் செய்வதற்காக? இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக; அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். 110உங்கள் கரங்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கப்பட்டு இருக்கும்போது நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனின் கவனத்தில் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ''ஆண்டவரே என்னை ஆராய்ந்து பாரும். இந்த மகத்தான நேரம் இங்கு இருப்பதை நான் பார்க்கக் கூடாதபடிக்கு இந்த உலகத்து காரியத்தினால் நான் மிகுந்த மந்தம் ஆகிவிட்டேனா? உங்களுக்குத் தெரியுமா? அது எப்பவுமே அப்படியாகவே இருக்கிறது. அது அப்படியாக சபையினுடாகச்சென்ற போது, அவர்கள் அதை அறிந்து கொள்ளவேயில்லை. அது சரித்திரம். மேலும் மேலும் வார்த்தை நிரூபணமாவதைப் பார்ப்பது, தேவனுடைய வார்த்தை பிரத்தியச்சமாவதைப் பார்ப்பது மற்றும் இயேசு கிறிஸ்து என்ற நபராகிய அவரே மக்கள்மத்தியில் வந்து அவர், முன் செய்தது போல் செய்வது எல்லாமும் உங்களைக் கடந்து போக விடாதீர்கள் நண்பர்களே‚ 111பரலோகப் பிதாவே, ஆண்டவரே‚ உமது வார்த்தையைப் படித்தாயிற்று சாட்சிகள் கொடுக்கப்பட்டது, பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த வார்த்தையை மற்றும் சாட்சியை நிரூபணம்பண்ணினார். இப்பொழுது அது மக்களின் கரத்தில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆண்டவரே‚ அது அவர்களுடைய மடியில் இருக்கிறது. சொல்வதற்கு எனக்கு தெரிந்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. நீர் செய்வதாக வார்த்தையில் எழுதியுள்ளதைத் தவிர வேறு எதையும் நான் அறியேன். நீர் ஏற்கனவே அவர்களை சுகமாக்கிவிட்டீர்; அதை அவர்கள் விசுவாசிக்கச் செய்வதேயாகும். நீர் இவ்வாறு செய்யும்போது; நாங்கள் எப்படி அதை சந்தேகித்துக்கொண்டிருக்க முடியும்? சாத்தான் எங்கள் உணர்வுகளை மறத்துப்போகச் செய்யும்படி எப்படி நாங்கள் அனுமதிக்கமுடியும்? சாத்தானே இந்த மக்கள் சுகம் பெறுதலை நான் அறிவிக்கிறேன். மற்றும் இங்கு இருந்து வெளியேறு‚ இயேசுகிறிஸ்து நாமத்தில் வெளியே வா‚ இந்த மக்களை போக விடு என்று இயேசு கிறிஸ்து நாமத்தில் உனக்கு நான் ஆணையிடுகிறேன். நீங்கள் அவரை விசுவாசிப்பீர்கள் என்றால் இப்பொழுது எழும்பி நில்லுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழும்பி நில்லுங்கள். மற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். எழும்புங்கள் மற்றும் அதை விசுவாசியுங்கள். இனிமேல் அதைக் குறித்து சந்தேகப்படாதீர்கள். இயேசு கிறிஸ்து நாமத்தில் சந்தோஷம், வல்லமை, உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவனை இந்த மக்களுக்கு பரிசுத்தஆவியானவர் கொண்டு வரட்டும், ஆண்டவரே‚ இப்பொழுது அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். மற்றும் தேவனுடைய பரிசுத்த நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. நாங்கள் அவரை நேசிக்கிறோம். நாங்கள் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். நாங்கள் ஒப்பற்ற, நித்தியமுள்ள, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் அவரைத் தொழுகிறோம். அவருடைய நாமத்தில் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் இங்கு இருக்கிறார். ஆமென்.